Deiva Machan Review :விமலின் தெய்வ மச்சான் விமர்சனம்! படம் எப்படி இருக்கு?

விமல் நடித்திருக்கும் தெய்வ மச்சான் விமர்சனத்தை இங்கு பார்போம்.  பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில் அனிதா சம்பத், பாண்டியராஜா, பாலா சரவணன் ஆகியோர் நடித்துள்ளனர். 

 
deiva machan movie review tamil

விமல் இதற்கு முன்பு நடித்த கிராமத்து பின்னணி கொண்ட களவாணி தேசிங்கு ராஜா, மன்னர் வகையறா போன்ற படங்கள் அவருக்கு நல்ல பெயரை வாங்கி தந்தன. அதே நம்பிக்கையில் விமல் களம் இறங்கிய திரைப்படம் தான் தெய்வ மச்சான். முழுக்க முழுக்க கிராமத்து கதைக்களம்.

சின்னத்திரை நிகழ்ச்சியான நாளைய இயக்குனரில் கலந்து கொண்ட இயக்குனர் மார்டின் நிர்மல் குமார் இந்த படத்தை இயக்கியுள்ளார். இவர் அக்மார்க் 90ஸ் கிட்ஸ் என்பதை படத்தில் இடம்பெறும் பல காட்சிகளில் நிரூப்பித்து விட்டார். இதுவரை தமிழ் சினிமாவில் மாமன் - மச்சான், அண்ணன் - தங்கை சென்டிமெண்டில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் இந்த தெய்வ மச்சான் மற்ற படங்களில் இருந்து சற்று வேறுப்படுகிறது.

தங்கை குங்குமத்தேனை (அனிதா சம்பத்) நல்ல முறையில் கல்யாணம் செய்து வைக்க வேண்டும் என நினைக்கிறார் அண்ணன் தபால் கார்த்தி ( விமல்). இவருக்கு வித்தியாசமான சக்தியும் இருக்கிறது. இவர் கனவில் வரும் சாட்டைக்காரன் அடுத்து ஊரில் நடக்க போகும் இறப்புகளை பற்றி சொல்கிறார். சாட்டைக்காரன் சொன்னது போலவே அனைத்து மரணமும் நடக்கிறது. இப்படி இருக்கையில் பல பிரச்சனைகளுக்கு பிறகு குங்குமத்தேனுக்கு கல்யாணம் முடிவாகிறது. கல்யாணத்திற்கு முந்தைய இரவு கார்த்தி கனவில் சாட்டைக்காரன் வந்து தங்கையின் கணவர் இறந்து விடுவார் என்கிறார். அதிர்ந்து போகும் கார்த்தி அடுத்து என்ன செய்கிறார்? மச்சானை காப்பாற்றுகிறாரா? என்பது மீதிக்கதை.

படத்தின் பிளஸ்

குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் படியான முழு நீள நகைச்சுவை படமாக வெளி வந்துள்ளது தெய்வ மச்சான். செய்தி வாசிப்பாளர் டூ நடிகையாக மாறி இருக்கும் அனிதா சம்பத், பாண்டியராஜன், தீபா, ஆடுகளம் நரேன் ஆகியோர் தங்களது நடிப்பை இயல்பாகவே வெளிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக விமல் - பாலா சரவணன் காமெடி காம்போ வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. கேமில் ஜெ அலெக்ஸெனின் ஒளிப்பதிவு கண்களுக்கு குளிர்ச்சியை தருகிறது. திண்டுக்கலின் இயற்கை அழகை கண்களுக்கு விருந்தாக்குகிறார். இயல்பான வசனங்களும் கவனத்தை பெறுகின்றன.

vimal deiva machan

மைனஸ்

காமெடியில் சிக்சர் அடித்த தெய்வ மச்சான், திரைக்கதையில் தோய்வை சந்திக்கிறது. நிறைய சீன்களை எடிட்டில் தூக்கி இருக்கலாம் என தோண வைக்கிறது. தேவையில்லாத காட்சிகள் தோய்வை ஏற்படுத்துவது படத்தின் மைனஸ். ஆனால் இடை இடையில் வரும் காமெடி அந்த தோய்வை மறக்க வைக்கிறது. படத்தின் நீளத்தை சற்று குறைத்திருக்கலாம். பாடல்களும் சுமார் ரகம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சென்று சிரித்து வர தெய்வ மச்சான் பெஸ்ட் சாய்ஸ்.

இந்த பதிவும் உதவலாம்:வசூல் சாதனை.. பத்து தல மற்றும் விடுதலை பாக்ஸ் ஆபீஸ் கலெக்‌ஷன்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP