herzindagi
viduthalai part movie review

Viduthalai Movie Review : குவியும் பாராட்டு.. எப்படி இருக்கிறது விடுதலை பார்ட் 1 ?

இன்று வெளியாகி இருக்கும் விடுதலை முதல் பாகம் படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.   படத்திற்கு எல்லா பக்கத்தில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. 
Editorial
Updated:- 2023-04-03, 10:20 IST

தமிழ் சினிமாவின் தரமான இயக்குனர் என பாராட்டப்படும் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் திரைப்படம் விடுதலை பார்ட் 1. இந்த படத்தில் நகைச்சுவை நடிகட் சூரி ஹீரோவாக நடித்துள்ளார். அதே போல் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர்களுடன் ஜிவி பிரகாஷ் தங்கை பவானி ஸ்ரீ, கெளதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் என பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர். இசையானி இளையராஜா இசையமைத்துள்ளார். ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக கொண்டு விடுதலை திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது. கதையின் நீளத்தை மையமாக கொண்டு இயக்குனர் வெற்றிமாறன் படத்தை 2 பாகமாக வெளியிட முடிவு செய்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்:பத்து தல மற்றும் தசரா படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? அசத்தல் விமர்சனம்!

அதன்படி விடுதலை பார்ட் 1 இன்று தியேட்டர்களில் ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? என்பதை பார்ப்போம்.

விடுதலை விமர்சனம்

படத்தை பார்த்த ரசிகர்கள் தொடங்கி சினிமா விமர்சகர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் படத்தை பாராட்டி தள்ளியுள்ளனர். குறிப்பாக ஹீரோவாக அறிமுகமாகி இருக்கும் சூரியின் நடிப்பு கண்களில் கண்ணீரை வரவைப்பதாக பதிவு செய்துள்ளனர். வழக்கம் போல் ஆல் ரவுண்டர் விஜய் சேதுபதி தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார் எனவும் கூறியுள்ளனர்.

viduthalai part

படத்தில் அனைத்தும் நடிகர், நடிகைகளும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் எனவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். படத்தை பார்ப்பவர்களுக்கு கண்டிப்பாக 2 நாட்களுக்கு அதன் தாக்கம் இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இசைஞானி இளையராஜாவின் பின்னணி இசை மிரட்டலாக உள்ளதாம். இதுத்தவிர படத்தின் கலை வேலை, கேமரா என அனைவரின் உழைப்புக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்த பதிவும் உதவலாம்:பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீட்டு விழாவின் சிறந்த தருணங்கள் - ஒரு பார்வை

மீண்டும் தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும் படத்தை தந்து வெற்றிமாறன் சாதனை படைத்து விட்டார் என்கின்றனர் சினிமா படைப்பாளிகள்.

Images Credit: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com