மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் பொன்னியின் செல்வன் 2 வது பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை விடவும் 2வது பாகத்திற்கு எதிர்ப்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில் நேற்றைய தினம் பொன்னியின் செல்வன் 2 இசை வெளியீடு மற்றும் ட்ரெய்லர் வெளியீடு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் அரங்கேறியது.
சினிமா பிரபலங்கள், மூத்த நடிகர், நடிகைகள், பொன்னியின் செல்வன் படக்குழுவினர் என ஒட்டு மொத்த திரை நட்சத்திர்டங்களும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் துரைமுருகன், நடிகர் சிம்பு, நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் அழைக்கப்பட்டனர். விழாவில் அரங்கேறிய சிறப்பு தருணங்களை பற்றி பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்:வயதானவர்களை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்
இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சியை விஜே ரம்யா மற்றும் பிக் பாஸ் புகழ் ராஜூ தொகுத்து வழங்கினர். விழாவில் முதல் ஆளாக பேச அழைக்கப்பட்டவர் எழுத்தாளர் ஜெயமோகன். கைத்தட்டல்களுடன் பேச தொடங்கிய அவர், முதல் பாகம் வெறும் ட்ரெய்லர் தான் 2வது பாகத்தில் தான் மெயின் பிச்சர் இருக்கிறது என கூறி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். அதே போல் இந்த விழாவுக்கு சுஹாசினியின் நெருங்கிய தோழிகளான நடிகை குஷ்பு, ரேவதி, ஷோபனா ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
அவர்கள் மூவரும் ஒன்றாக மேடை ஏறி இயக்குனர் மணிரத்னத்தை புகழ்ந்து பேசினர். பொன்னியின் செல்வன் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை கூறினர். நிகழ்ச்சியை இன்னும் சுவாரசியமாக்க பட்டிமன்ற பேச்சாளர் ராஜாவும் பாரதி பாஸ்கரும் பொன்னியின் செல்வனில் அதிகம் தெரிவது காதலா, வீரமா என குட்டி பட்டிமன்றத்தை நிகழ்த்தினர். அனைவரும் கைத்தட்டி ரசித்தனர்.
அடுத்து, சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் பேசினார். அவரின் பேச்சுக்கு ரசிகர்களிடம் கைத்தட்டல்கள் பறந்தன. தயாரிப்பாளர் அல்லிராஜா சுபாஸ்கரன் தனது நெருங்கிய நண்பர் என்ற விஷயத்தையும் அவர் பதிவு செய்தார். அதே போல் மணிரத்னம் இருட்டில் படம் எடுப்பவர் என கலாய்த்ததாகவும் முதல் பாகத்தை பார்த்த பின்பு வாயடைத்து போய்விட்டதாக கூறினார்.
அதன் பிறகு இயக்குனர் இமயம் பாரதிராஜா எம்.ஜி.ஆர். பொன்னியின் செல்வன் எடுக்க நினைத்த கதையை சொன்னார். அவருக்கு பின்பு உலக நாயகன் கமல்ஹாசன் மேடை ஏறினார். வழக்கம் போல் மணிரத்னத்தை மனதார பாராட்டினார். மணியை கண்டு பொறாமைப்படுவதாகவும் கூறினார். மேலும் இது தமிழ் சினிமாவின் பொற்காலம் என்றார்.
அடுத்தாக இசை புயல் மேடை ஏறினார். அவரை தொடர்ந்து சரத் குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா ராய், விக்ரம் ஆகியோர் பேசினர். குறிப்பாக ஐஸ்வர்யா ராய் தமிழில் அனைவருக்கு நன்றி கூறி மொத்த அரங்கத்திடம் இருந்தும் கைத்தட்டல்களை அள்ளினார். சிறப்பு விருந்தினராக வந்திருந்த சிம்பு மணிரத்னத்துக்கு மனதார நன்றி கூறினார். அடுத்து, கார்த்தி, த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் தங்களது நன்றியை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருக்கு கூறினர். விழா இறுதியில் ஏ.ஆர் ரகுமான் பாடகி, சித்ராவுடன் சேர்ந்து பாடலை பாடினார். மொத்த அரங்கமும் இசையால் நனைந்தது.
இந்த பதிவும் உதவலாம்:பத்து தல மற்றும் தசரா படங்களை பார்த்த ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்? அசத்தல் விமர்சனம்!
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com