இந்த வாரம் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான வாரம் என்றே சொல்லலாம். நீண்ட இடைவெளிக்கு பிறகு அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்கள் தியேட்டரில் ரிலீஸாகின்றன. வியாக்கிழமையான இன்று சிம்பு நடித்திருக்கும் பத்து தல மற்றும் தெலுங்கு நடிகர் நெச்சூரல் ஸ்டார் நானி நடித்திருக்கும் தசரா படங்கள் திரைக்கு வந்துள்ளன. நாளை வெற்றிமாறன் இயக்கியுள்ள விசாரணை படம் திரைக்கு வருகிறது.
பான் இந்தியா வருகைக்கு பின்பு தெலுங்கு மற்றும் கன்னடம் படங்கள் தமிழ் மொழியில் அதிகம் வெளியாகின்றன. வெளியாவது மட்டுமில்லை அவை பாக்ஸ் ஆபீஸ் வசூலிலும் பட்டையை கிளப்புகின்றன. கேஜிஎப், ஆர்ஆர்ஆர், காந்தார போன்ற படங்கள் அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளன.
இந்த பதிவும் உதவலாம்:வருகிறார்கள் சோழர்கள் இன்று வெளியாகிறது பொன்னியின் செல்வன் 2 ட்ரெய்லர்
அந்த வரிசையில் தெலுங்கு நடிகர் நானி மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் தசரா திரைப்படமும் தமிழில் நேரடியாக ரிலீஸாகியுள்ளது. அதுமட்டுமில்லை சிம்புவின் பத்து தல திரைப்படம் ரிலீஸாகியிருக்கும் அதே நாளில் தசரா திரைப்படமும் வெளியாகியிருப்பது சினிமா விமர்சகர்கள் மத்தியில் அதிகம் கவனத்தை பெற்றுள்ளது.
இப்போது 2 படங்களையும் பார்த்த ரசிகர்களின் விமர்சனத்தை பார்போம். பத்து தல மற்றும் தசரா படங்களை முதல் நாள் முதல் காட்சி பார்த்த ரசிகர்களின் ரியாக்ஷன் இதோ.
பத்து தல விமர்சனம்
ஜில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படத்திற்கு பிறகு இயக்குனர் ஒபிலி கிருஷ்ணா சிம்புவை வைத்து பத்து தல படத்தை இயக்கியுள்ளார். உடல் எடையை குறைத்து சூப்பர் கம்பேக் கொடுத்திருக்கும் சிம்பு, மாநாடு, வெந்து தணிந்தது காடு திரைப்படங்களுக்கு பிறகு பத்து தல படத்தில் நடித்துள்ளார். இது கன்னட ரீமேக் என்பது அனைவரும் அறிந்தது. கன்னடத்தில் சிம்பு நடித்த ரோலில் சிவ ராஜ்குமார் நடித்து இருந்தார். கன்னடத்தில் இந்த திரைப்படத்திற்கு மஃப்டி என பெயர் வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழில் இன்று வெளியாகியிருக்கும் பத்து தல படத்தை பார்த்த ரசிகர்கள் பாசிடிவ்வான விமர்சனங்களை பதிவு செய்து வருகின்றனர். சமூக வலைத்தளங்களிலும் தொடர்ந்து படம் குறித்த பாசிட்டிவ் ரியாக்ஷன்கள் வெளி வந்து கொண்டிருக்கின்றனர். படத்தின் 2வது ஆஃப் சிம்பு ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் என்கின்றனர். அதிலும் குறிப்பாக படத்தின் இசையை ரசிகர்கள் கொண்டாடி தள்ளுகின்றனர். ராவடி பாடலுக்கு தியேட்டரில் விசில் பறக்கின்றன. சிம்புக்காக பிளே செய்யப்படும் பிஜிஎம் தரமாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
அதே போல் ப்ரியா பவானி சங்கர், கெளதம் மேனன், கவுதம் கார்த்திக் நடிப்பு கச்சிதமாக இருப்பதாகவும் கூறுப்படுகிறது. மொத்தத்தில் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பத்து தல படத்திற்கு சென்றால் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்.
தசரா
தெலுங்கு சினிமாவில் நேச்சூரல் ஸ்டார் நானி அதிகப்படியான ரசிகர்களை கொண்டவர். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஒவ்வொரு படமும் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டது. சென்ற வருடம் சாய்பல்லவியுடன் சேர்ந்து இவர் நடித்திருந்த ’ஷ்யாம் சிங்கா ரெட்டி’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. தமிழிலும் ரசிகர்கள் இந்த படத்தை கொம்ண்டாடினர். இந்நிலையில் தற்போது நானி, கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்திருக்கும் தசரா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
படத்தை பார்த்த ரசிகர்கள் நானிக்கு தேசிய விருது கன்ஃபார்ம் என்கின்றனர். உடை, நடை, பேச்சு என நானியின் நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஏற்கெனவே தசரா லுக் புஷபா படத்தை ஞாபகப்படுத்துவதாக விமர்சனம் எழுந்தது. ஆனால் படத்த்தின் கதை மொத்தமாக வேறு என்பதை படத்தை பார்த்த ரசிகர்கள் உறுதி செய்துள்ளனர். கீர்த்தியின் கிளைமேக்ஸ் காட்சிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த பதிவும் உதவலாம்:வயதானவர்களை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகைகள்
நானியும் கீர்த்தி சுரேஷூம் சேர்ந்து ஐதராபாத்தில் ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்து ரசித்துள்ளனர்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation