herzindagi
Siddharth joins Ayalaan Team

அயலான் படத்தில் திடீரென இணைந்த சித்தார்த்?

சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படத்தில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு நடிகர் சித்தார்த் குரல் கொடுத்துள்ளார்.
Editorial
Updated:- 2023-12-13, 14:24 IST

ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் திரைப்படம் பொங்கல் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இந்தப் படம் பெரும் பொருட் செலவில் உருவாகியுள்ளது. அயலான் திரைப்படத்தில் ஏலியன் கதாபாத்திரம் இடம்பெற்று இருப்பதால் இந்தப் படம் சிறுவர்களுக்கு மிகவும் பிடிக்கும் என படக்குழு நம்புகிறது.

Ayalaan Movie

படத்தின் டீஸரிலும் ஏலியன் கதாபாத்திரத்தின் குரல் இதுவரை சஸ்பென்ஸாக வைக்கப்பட்டு இருந்தது. ஏனென்றால் இதுவரை ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே ஏலியன்கள் பேசிப் பார்த்திருப்போம். இதனால் அயலான் படத்தில் ஏலியனின் குரல் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்களுக்கு ஆர்வம் உண்டானது.

Siddharth with Ayalaan Team

ஏற்கனவே மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஆலோசனை கூறும் கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய் சேதுபதி குரல் கொடுத்திருந்தார். அது திரையிலும் சரியாக அமைந்தது. இதனால் அயலான் படத்திலும் ஏலியன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி குரல் கொடுக்க வாய்ப்புண்டு எனத் தகவல்கள் பரவின. 

மேலும் படிங்க விடாமுயற்சி நாயகி ரெஜினா கேசன்ட்ராவுக்கு பிறந்தநாள்

இந்த நிலையில் படக்குழு ஏலியனுக்கு குரல் கொடுத்த நடிகரின் அப்டேட்டை வெளியிட்டுள்ளது. நடிகர் சித்தார்த் அயலான் படத்தில் ஏலியன் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருப்பதாகப் படத்தின் தயாரிப்பாளர் ராஜேஷ் அறிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 

நீங்கள் அளித்த உற்சாகமும், அர்ப்பணிப்பும் மற்றும் கடின உழைப்பும் எங்கள் அயலானை மிகவும் யதார்த்தமாகவும் அழகாகவும் மாற்றியுள்ளது என்றும் ஏலியனுக்கு நீங்கள் கொடுத்த குரலை மக்கள் விரும்புவார்கள் என நம்புவதாகவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் படிங்க கருப்பு நிற புடவையில் கிறங்கடிக்கும் நடிகை தமன்னா

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com