நடிகை தமன்னா கேடி என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். இதையடுத்து தனுஷுடன் படிக்காதவன், சூர்யாவுடன் அயன் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார். ஆனால் இந்தப் படங்களுக்கு முன்பாகவே கல்லூரி திரைப்படம் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெற்றார். அண்மையில் இவர் தமிழில் நடித்த ஜெயிலர் திரைப்படமும், வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான போலா சங்கர் திரைப்படமும் வெளியாகின.
அடுத்ததாகத் தமிழில் சுந்தர் சி.யின் அரண்மனை நான்காம் பாகத்தில் நடித்து வருகிறார். இந்தத் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியில் வேதா எனும் படத்தில் நடித்து வருகிறார்.
அனைத்து தென்னிந்திய மொழி திரையுலகிலும் தமன்னா நடித்துள்ளார். தமிழ் சினிமாவை விடத் தெலுங்கில் நடித்த பாகுபலி திரைப்படம் தமன்னாவுக்கு அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது.
மேலும் படிங்க சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள்! ரசிகர்கள் அலப்பறை
விழாக்களில் பங்கேற்பதை தமன்னா வாடிக்கையாகக் கொண்டவர் என்பதால் அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார். அதுமட்டுமின்றி விளம்பரங்களுக்காகவும் ஸ்பெஷல் போட்டோ ஷூட் செய்யக்கூடியவர். இந்த நிலையில் கருப்பு நிற சேலை அணிந்த புகைப்படங்களைச் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
தமன்னா கருப்பு புடவையில் மேட்சிங் பிளவுஸுடன் பளபளப்பாகக் காணப்பட்டார். மும்பையில் நடைபெற்ற ரன்தீப் ஹூடாவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு இருக்கின்றன.
மேலும் படிங்க பிரபல சீரியல் நடிகையை திருமணம் செய்து கொண்ட ரெடின் கிங்ஸ்லி
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com