தமிழ் சினிமாவில் பிரசன்னா - லைலா நடிப்பில் வெளியான கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமான நடிகை ரெஜினா கேசன்ட்ரா சென்னையை சேர்ந்தவர். மெட்ராஜ் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பு பயின்றவர். சிவா மனசுல சக்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கான சிவா மனசுல ஸ்ருதி என்ற படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களின் கவனத்தை பெற்றார்.
அந்தப் படம் வெற்றியடைந்த நிலையில் தெலுங்கு திரையுலகில் அவருக்கு ஏராளமான வாய்ப்புகள் கிடைத்தன. இதனிடையே கேடி பில்லா கில்லாடி ரங்கா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகப் பாப்பா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 2014ல் முழுவதும் தெலுங்கு சினிமாவிலேயே கவனம் செலுத்தினார்.
2015ல் தமிழில் ராஜதந்திரம் எனும் படத்தில் நடித்தார். தொடர்ந்து அவருக்குத் தெலுங்கு திரையுலகிலேயே வாய்ப்புகள் கிடைத்தன. 2017ல் லோகேஷ் கனகராஜின் மாநகரம், உதயநிதியுடன் சரவணன் இருக்க பயமேன், அதர்வாவுடன் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் என அடுத்தடுத்து மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்தார்.
மேலும் படிங்க கருப்பு நிற புடவையில் கிறங்கடிக்கும் நடிகை தமன்னா
இரண்டு இந்தி படங்களிலும் நடித்துள்ளார். செக்ஸன் 108 எனும் படம் அடுத்தாண்டு வெளியாகிறது. திரையுலக பயணத்தில் தமிழ் படங்களை விடத் தெலுங்கு படங்களில் அதிகம் நடித்து இருக்கிறார். இந்தாண்டு ரெஜினா கேசன்ட்ரா நடித்த படங்கள் எதுவும் வெளியாகவில்லை.
தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடித்து வரும் விடாமுயற்சி திரைப்படத்தில் பிஸியாக உள்ளார். இதற்காக அவர் அஜர்பைஜான் நாட்டிற்கும் சென்றுள்ளார். அஜர்பைஜானில் இருக்கும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரெஜினா ஒரு படத்திற்கு 60 லட்சம் முதல் 70 லட்சம் ரூபாய் பெறுவதாகக் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிங்க காந்தாரா டீஸரில் இதை கவனித்தீர்களா ? துளு மொழியில் படத்தை வெளியிட வலியுறுத்தல்
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com