herzindagi
image

Morning Routine: குளிர்காலத்தில் குடல் பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? இந்த பழக்கங்களை காலை நேரத்தில் பின்பற்றவும்

குளிர்காலத்தின் போது சிலருக்கு குடல் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும். அதனை கட்டுப்படுத்த காலை நேரத்தில் நாம் சில எளிய பழக்க வழக்கங்களை கடைபிடிக்க வேண்டும். அவற்றை, இந்த பதிவில் காண்போம்.
Editorial
Updated:- 2025-12-19, 08:17 IST

குளிர்காலத்தில் இதமான குளிர் காற்று, சூடான காபி போன்றவை நம் நினைவுக்கு வந்தாலும், இந்த பருவநிலை நமது உடல் ஆரோக்கியத்தில் சில சவால்களையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, செரிமான மண்டலம் மற்றும் குடல் ஆரோக்கியம் ஆகியவை இந்த காலத்தில் சற்று மந்தமடையக் கூடும். அஜீரணம், மலச்சிக்கல், நெஞ்செரிச்சல் மற்றும் வயிறு உப்புசம் போன்ற பிரச்சனைகள் குளிர்காலத்தில் அதிகரிக்கலாம்.

குடல் பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும் காலை நேர பழக்கங்கள்:

 

காலை எழுந்தவுடன் நாம் செய்யும் முதல் செயல், அந்த நாள் முழுவதும் நமது குடல் ஆரோக்கியத்தைத் தீர்மானிக்கிறது. உங்கள் காலை பொழுதை சரியான பழக்க வழக்கங்களுடன் தொடங்கினால், குடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதோடு, நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம். குளிர்காலத்தில் அவசியம் பின்பற்ற வேண்டிய 5 எளிய காலை நேர பழக்க வழக்கங்களை பார்க்கலாம்.

 

காலை எழுந்ததும் தண்ணீர் அருந்த வேண்டும்:

 

காலை எழுந்ததும் சூடாக ஒரு கப் காபி குடிப்பது பலருக்கும் பிடித்தமான பழக்கம். ஆனால், அது குடலுக்கு தீங்கானது. இரவு முழுவதும் 6 முதல் 8 மணி நேரம் தூங்கிய பிறகு, நமது உடல் இயற்கையாகவே நீர்ச்சத்தை இழந்திருக்கும். இந்த நேரத்தில் காஃபின் கலந்த காபியை முதலில் குடிப்பது அசிடிட்டி மற்றும் மலச்சிக்கலை அதிகரிக்கும். எனவே, காலை எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.

 

பயன்கள்:

 

  • இது குடல் இயக்கத்தை தூண்டி, மலம் கழிப்பதை எளிதாக்குகிறது.
  • கல்லீரலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது.
  • குடல் உட்புற பகுதியை நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்கிறது.

மேலும் படிக்க: Winter Diet: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க வேண்டுமா? சிம்பிள் டயட் டிப்ஸ் 

 

சூரிய ஒளியை பெற வேண்டும்:

 

நமது குடல் இயக்கம், தூங்கும் முறை மற்றும் ஹார்மோன் சுரப்பு ஆகியவை சர்காடியன் ரிதத்தை சார்ந்து இயங்குகிறது. காலை நேர சூரிய ஒளி உங்கள் கண்களிலும், சருமத்திலும் படும் போது, இந்த உடல் இயக்கத்தை சீராக மாற்றுகிறது. எனவே, காலை 5 முதல் 10 நிமிடங்கள் வரை சூரிய ஒளியில் நின்றால் போதுமானதாக இருக்கும்.

Digestion Tips

 

பயன்கள்:

 

  • சூரிய ஒளி, குடலின் இயக்கத்தையும், இரைப்பை அமில சுரப்பையும் கட்டுப்படுத்துகிறது.
  • இது செரோடோனின் (Serotonin) ஹார்மோன் உற்பத்தியை மேம்படுத்துகிறது.
  • இதனால் செரிமானம் மேம்படுவதுடன், மனநிலை உற்சாகமாக இருக்கும். மேலும், இரவு ஆழ்ந்த தூக்கம் வரும்.

 

மிதமான உடற்பயிற்சி அவசியம்:

 

காலையில் எழுந்ததும் ஜிம்மிற்கு சென்று கடினமான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பதில்லை. குடலை தூண்டுவதற்கு சிறிய அசைவுகள் போதுமானது. லேசான ஸ்ட்ரெச்சிங் (Stretching), யோகா, சிறிய நடைபயிற்சி போன்றவற்றை இதற்காக மேற்கொள்ளலாம்.

 

பயன்கள்:

 

  • காலை நேர வயிறு உப்புசத்தை தடுத்து, உடலில் உள்ள கழிவுகளை இயற்கையாகவே வெளியேற்ற இது உதவுகிறது.
  • தினமும் காலையில் லேசான உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மலச்சிக்கல் குறைவதாகவும், பசி எடுக்கும் திறன் அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.

மேலும் படிக்க: Foods for Liver Health: குளிர்காலத்தில் கல்லீரலில் இருந்து நச்சுகளை இயற்கையாக வெளியேற்ற உதவும் 5 உணவுகள் இதோ 

 

சத்தான காலை உணவு:

 

காலை உணவை தவிர்ப்பதோ அல்லது வெறும் மாவுச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதோ இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரித்து செரிமானத்தை பாதிக்கும். குடலுக்கு ஏற்ற உணவை உண்பது அவசியம். புரதம், நார்ச்சத்து மற்றும் எளிதில் ஜீரணமாகக் கூடிய ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த உணவுகளை காலையில் சாப்பிடலாம்.

Winter Health Tips

 

பயன்கள்:

 

  • இது இன்சுலின் அளவை சீராக வைப்பதோடு, தேவையற்ற பசியை குறைக்கிறது.
  • மேலும், குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களுக்கு உணவளித்து அசிடிட்டியை குறைக்கிறது.

 

சீரான சூழலில் சாப்பிட வேண்டும்:

 

நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ, அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பதும் அவ்வளவு முக்கியம். அவசரமாகவோ, மொபைல் போனை பார்த்துக் கொண்டோ அல்லது மன அழுத்தத்துடனோ சாப்பிடும் போது, செரிமான நொதிகள் சுரப்பது தடைபடுகிறது. அமர்ந்து, நிதானமாக, உணவை நன்றாக மென்று சாப்பிட வேண்டும். உங்கள் உடல், உணவை ஜீரணிக்க தயாராக உள்ளது என்ற தகவலை மூளைக்கு அனுப்ப வேண்டும்.

 

பயன்கள்:

 

  • இந்த ஒரு பழக்கத்தை மாற்றினால், பலருக்கு ஏற்படும் வயிறு உப்புசம் மற்றும் சாப்பிட்ட பின் ஏற்படும் கனமான உணர்வு ஆகியவை நீங்கி விடும்.
  • இது ஒரு ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மேம்படுத்த உதவியாக இருக்கும்.

 

குடல் பிரச்சனை என்பது வெறும் வயிறு வலி மட்டுமல்ல. அது நம் ஒட்டுமொத்த உடல் மற்றும் மன நலனையும் பாதிக்கக் கூடியது. இந்த குளிர்காலத்தில் குறிப்பிட்ட எளிய காலை நேர பழக்கங்களை கடைபிடித்தால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com