
Skin Care Tips in Tamil: உங்களுடைய வாழ்வில் நீங்கள் அன்றாடம் கடைபிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் உங்களது இளமை தோற்றத்தை பாதிக்கும் அபாயத்தை கொண்டுள்ளன. நீங்கள் வழக்கமாக பயன்படுத்தும் தரமான சரும பராமரிப்பு பொருட்கள் மற்றும் விலை உயர்ந்த சீரம் என எதுவாக இருந்தாலும், உங்கள் வாழ்க்கை முறை சீராக இருந்தால் மட்டுமே பலன் அளிக்கும். எனவே, உங்களுடைய அன்றாட பழக்க வழக்கங்கள் சரியான வகையில் இருத்தல் அவசியம்.
முதுமை தோற்றம் விரைவாக வருவதை தடுக்கும் வகையில் நீங்கள் மேற்கொள்ள கூடிய எளிய வாழ்க்கை முறை மாற்றங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இவற்றை தடுப்பதுடன் மூலம் எப்போது நீங்கள் இளமையாக காட்சியளிக்க முடியும்.
இரவு முழுவதும் கண் விழித்து வேலை செய்வது அல்லது பொழுதுபோக்குடன் இருப்பது என்பது ஒரு பெரிய விஷயம் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உங்கள் சருமமும், உடலும் அதற்கான பாதிப்பை அனுபவிக்கின்றன. தூக்கம் என்பது உங்கள் உடலின் பழுதுபார்க்கும் நேரம். நீங்கள் தூங்கும் போது தான் சரும செல்கள் மீளுருவாக்கம் அடைகின்றன. போதுமான தூக்கம் இல்லையென்றால், உடலில் கார்டிசோல் (Cortisol) என்ற மன அழுத்த ஹார்மோன் அதிகரித்து, வீக்கம், முகத்தில் சுருக்கங்கள் மற்றும் சரும பொலிவின்மைக்கு வழிவகுக்கும். தொடர்ந்து கண் விழித்திருக்கும் போது கண்களை சுற்றியுள்ள கருவளையங்கள், வீக்கம் மற்றும் சோர்வான தோற்றம் ஆகியவை அதிகரிக்கும்.
மேலும் படிக்க: Skin care tips: சரும பராமரிப்புக்கு உதவும் பீட்ரூட்; இனிமே தினமும் இப்படி யூஸ் பண்ணுங்க
அதிக இனிப்புகள், பதப்படுத்தப்பட்ட சிற்றுண்டிகள் மற்றும் துரித உணவுகள் ஆகியவை உங்கள் பசியை தீர்த்து திருப்திப்படுத்தலாம். ஆனால், அவை உங்கள் சருமத்தின் முக்கிய அங்கமான கொலஜனுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. சர்க்கரை அதிகமாக உட்கொள்ளப்படும் போது, அது சில வகையான சேர்மங்களை உருவாக்குகிறது. இவை கொலஜன் மற்றும் எலாஸ்டின் (Elastin)ஆகியவற்றை பாதிக்கின்றன. இதனால், உங்கள் சருமம் கடினமடைந்து, அதன் நெகிழ்வுத்தன்மையை இழந்து, சுருக்கங்கள் விரைவாக தோன்றுகின்றன. மேலும், இது முகப்பரு மற்றும் வீக்கத்தையும் ஏற்படுத்தும்.

மேலும் படிக்க: Hair Care Tips: பாரம்பரிய கூந்தல் பராமரிப்பு முறையை பயன்படுத்தி உங்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவும் எளிய குறிப்புகள்
மன அழுத்தம் உங்கள் மனநிலையை மட்டுமல்ல, உங்கள் உடலையும் பாதிக்கிறது. நாள்பட்ட மன அழுத்தம் அதிக கார்டிசோலை உற்பத்தி செய்கிறது. இது கொலஜனை பாதித்து, உங்கள் சருமத்தை பலவீனப்படுத்துகிறது. காலப்போக்கில், இது முகத்தில் நுண்ணிய கோடுகள், பொலிவின்மை மற்றும் முடி உதிர்தல் போன்ற தீவிர பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

இந்த அன்றாட பழக்கங்களை உங்கள் வாழ்க்கையில் மாற்றிக் கொள்வதன் மூலம் முதுமையான தோற்றத்தை கட்டுப்படுத்தலாம். முதுமை தோற்றம் தவிர்க்க முடியாதது என்றாலும், அதனை தாமதப்படுத்தும் திறன் நம் கைகளில் உள்ளது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com