பழங்காலத்திலிருந்தே வெந்தயத்தை சமையலுக்காக மட்டுமல்லாமல் பசியைக் கட்டுப்படுத்தவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும், இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கவும் நாம் பயன்படுத்தி வந்துள்ளோம். இரண்டு ஸ்பூன் வெந்தயத்தை
இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதை ஒரு அதிசய பானம் என்றே சொல்லலாம்.
ஒவ்வொரு முறை செரிமான பிரச்சனை ஏற்படும் போது நிவாரணம் பெறுவதற்கு மருந்து கடைகளை நாட வேண்டிய தேவையில்லை. இதற்கான தீர்வு உங்கள் சமையலறையில் உள்ள வெந்தயத்திலேயே கிடைக்கிறது. இரவில் வெந்தயத்தை தண்ணீர் ஊறவைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கவும். வெந்தயத்தில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் மற்றும் அஜீரணம் போன்ற பொதுவான இரைப்பை குடல் பிரச்சினைகளிலிருந்து நிவாரணம் அளிக்கும்.
எப்போது பசியாக உணர்ந்து எளிதில் சோர்வடைந்துவிடுகிறீர்களா ? நம் உணவுமுறையில் குறைவான நார்ச்சத்து காரணமாக இந்த பிரச்னை ஏற்படலாம். இதன் விளைவாக உடல் எடை அதிகரிப்பு மற்றும் சில உடல்நல பிரச்னைகளை சந்திப்போம். இதற்கு எளிதான தீர்வு வெந்தய தண்ணீர் ஆகும். வெந்தய தண்ணீரை அடிக்கடி குடிப்பதன் மூலம் உடலில் கொழுப்பு தேக்கத்தை குறைத்து வளர்ச்சிதை மாற்று விகிதத்தை அதிகரிக்க முடியும். இதனால் அடிக்கடி பசி எடுப்பது தவிர்க்கப்படும். சில சமயங்களில் நன்கு சாப்பிட்டாலும் ஒரு மணி நேரத்திலேயே மீண்டும் பசியெடுக்கும். அதையும் தவிர்க்கலாம். அதிகம் சாப்பிடுவதற்கான வாய்ப்பும் குறையும்.
வெந்தய தண்ணீர் நம்முடைய உடலில் கொழுப்பின் அளவுகளில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வெந்தய தண்ணீரின் ஜெல் போன்ற நார்ச்சத்துக்கள் செரிமானப் பாதையில் அதிசயங்களை நிகழ்த்தும். வெந்தய தண்ணீர் கொழுப்புடன் கலந்து அவை இரத்த ஓட்டத்தில் நுழைவதை தடுக்கின்றன. இதன் விளைவாக உடலில் கெட்ட கொழுப்பின் அளவு குறையக்கூடும்.
மேலும் படிங்க உடல் தெம்பு பெற நெல்லிக்காய் ஜூஸ் வாடிக்கையாக குடிச்சு பழகுங்க
இரத்த சர்க்கரை அளவை சீராக நிர்வகிப்பது எப்போதுமே ஒரு சவாலான காரியம். இதை சரி செய்வதற்கு வழி ஒன்று உள்ளது. அதிக சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகள் உடலில் உறிஞ்சப்படுத்துவதை ஒழுங்குபடுத்தி செரிமானத்தை எளிதாக்குவது மிக முக்கியம். இதற்கான வழி வெந்தய தண்ணீரை உணவுமுறை வழக்கத்தில் சேர்ப்பதாகும். வெந்தய தண்ணீரை குடிப்பதன் மூலம் உடலில் இயற்கையான இன்சுலின் உற்பத்தி தூண்டப்படுகிறது. இதன் விளைவாக நாள் முழுவதும் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
இதுபோன்ற கட்டுரைகளுக்கு ஹெர் ஹிந்தகியுடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com