
குளிர்காலத்தின் போது சில வகையான உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. மேலும், குளிர்காலத்தில் நமது செரிமான மண்டலத்தின் செயல்பாடு சற்று மந்தமாகவே இருக்கும். இதனால் அஜீரணம், வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது வழக்கம்.
குடல் ஆரோக்கியமே உடல் ஆரோக்கியத்தின் திறவுகோல் என்று மருத்துவர்கள் கூறுவார்கள். நமது நோய் எதிர்ப்பு மண்டலத்தில் பெரும் பகுதி குடலை சார்ந்தே உள்ளது. எனவே, இந்தக் குளிர்காலத்தில் நோய்களிலிருந்து விடுபடவும், செரிமானத்தை சீராக்கவும் குடலுக்கு நன்மை செய்யும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பது அவசியம். உங்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, குளிர்கால நோய்களை விரட்டும் 5 முக்கியமான உணவுகளை பற்றி பார்க்கலாம்.
குடல் ஆரோக்கியம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது புரோபயாட்டிக் தான். இவை குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமநிலையை பாதுகாக்கின்றன. தயிர், கெஃபிர் (Kefir) மற்றும் நொதித்தல் செயல்முறைக்கு உட்படுத்தப்பட்ட காய்கறிகள் இதற்கு சரியாக இருக்கும்.
மேலும் படிக்க: Winter Foods for Children: குளிர்காலத்தில் குழந்தைகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் எளிய உணவுகள் இதோ
கொழுப்பு என்றாலே உடலுக்கு கெடுதல் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆனால், செரிமான மண்டலம் சீராக இயங்க நல்ல கொழுப்புகள் மிக அவசியம். ஆலிவ் எண்ணெய், அவகேடோ பழங்கள் மற்றும் பாதாம், வால்நட் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

நம்முடைய சமையலறையில் இருக்கும் இந்த இரண்டு பொருட்களும் இயற்கையான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. இவை இரண்டும் சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளன.
மேலும் படிக்க: Winter Immunity Drinks: குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் 5 இயற்கை பானங்கள்
குளிர்காலத்திற்கு மிகவும் ஏற்ற, இதமான மற்றும் சத்தான பானம் என்றால் அது எலும்பு சூப் தான். ஆட்டுக்கால் சூப் இதற்கு நல்ல தேர்வாக இருக்கும்.

சாப்பிட்ட பிறகு வயிறு கனமாக இருப்பது போல சிலருக்கு தோன்றும். ஒரு கப் மூலிகை தேநீர் குடிப்பது உங்களை ரிலாக்ஸ் செய்யும். புதினா டீ மற்றும் சோம்பு தேநீர் சுவையாகவும், சத்தாகவும் இருக்கும்.
இது போன்று சரியான உணவுகளை தேர்ந்தெடுத்தால் குளிர்காலத்திலும் உங்கள் குடல் ஆரோக்கியத்தை சீராக பராமரிக்க முடியும். இதன் மூலம் நோய் தொற்றுகளை நீங்கள் தடுக்க முடியும்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com