herzindagi
enegry drink

இனி ஹார்லிக்ஸ் கடைகளில் வாங்க வேண்டாம்; வீடுகளிலேயே ஈஸியா இப்படி செய்யுங்க!

<span style="text-align: justify;">இந்தியாவில் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஹார்லிக்ஸ் விற்பனையாகிறது.</span>
Editorial
Updated:- 2024-03-08, 13:37 IST

ஹார்லிக்ஸ். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய பானங்களில் ஒன்றாக உள்ளது. இதற்கேற்ப தான் கடைகளிலும் அனைவருக்கும் ஏற்றவாறு விதவிதமான ப்லேவர்களில் விற்பனையாகிறது.அதிலும் பெண்கள் மற்றும் குழந்தைகளை இலக்காகக் கொண்டு தான் எண்ணற்ற விளம்பரங்களும் ஹார்லிக்ஸ் விற்பனையை அதிரிக்க மேற்கொள்ளப்படுகிறது. 

ஒரு சிலர் உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை அளிக்கும் என்று வாங்கிக் கொள்வார்கள். அதே சமயம் ஒரு சிலரோ எப்பொழுது செய்தார்கள்? என்னென்ன ஊட்டச்சத்துள்ள பொருள்கள் எல்லாம் சேர்த்திருக்கிறார்களோ? என்ற குழப்பத்தில் வாங்குவதைத் தவிர்ப்பார்கள். இனி இந்த குழப்பம் வேண்டாம். கடைகளில் வாங்காமல் ஹார்லிக்ஸை இனி வீடுகளிலேயே சுலபமாக செய்யலாம். இதோ எப்படி? என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள். 

homemade horlicks


மேலும் படிக்க: நெஞ்சு எரிச்சலா? எந்த நேரத்திலும் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

வீட்டிலேயே ஹார்லிக்ஸ் செய்முறை:

தேவையான பொருட்கள்

  • பச்சை வேர்க்கடலை- 1 கப்
  • பாதாம் - அரை கப்
  • பால் பவுடர்- அரை கப்
  • வெல்லம் அல்லது நாட்டுச்சர்க்கரை - அரை கப்
  • மால்ட் பவுடர் - 1 கப்
  • கோகோ பவுடர் - 3-5 டீஸ்பூன்

horlicks recipes

செய்முறை:

  • முதலில் வீட்டிலேயே ஹார்லிக்ஸ் செய்வதற்கு பார்லி பவுடர் செய்ய வேண்டும். இதற்கு பார்லி தானியங்களை ஊற வைத்து முளைக்கட்டி வைக்கவும். பின்னர் இதை ஓவனில் அல்லது கடாயில் வைத்து வறுத்து மிக்ஸியில் அரைத்துப் பொடியாக்கிக் கொள்ளவும்.
  • அடுத்தப்படியான எடுத்து வைத்துள்ள அரை கப் பாதாம் மற்றும் 1 கப் பச்சை வேர்க்கடலையை  வறுக்க வேண்டும். இரண்டையும் சேர்த்து வதக்கிக் கொள்ளக்கூடாது.தனித்தனியாக வறுத்துக் கொண்டு மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் இதனுடன் ஏற்கனவே அரைத்து வைத்துள்ள பார்லி பவுடர் மற்றும் வெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது ஊட்டச்சத்துள்ள ஹோம்மேட் ஹார்லிக்ஸ் ரெடி. 
  • இந்த ஊட்டச்சத்துள்ள ஹார்லிக்ஸை இனி நீங்கள் உங்களது குழந்தைகளுக்கு தாராளமாக பாலில் கலந்துக் கொடுக்கலாம். எவ்வித உடல் நல பிரச்சனையும் உங்களுக்கு ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாக்லேட் சுவை பிடிக்கும் என்பதால் நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ஹார்லிக்சுடன் கோகோ பவுடரைச் சேர்த்துக் கொள்ளலாம். 
  • ஏற்கனவே இந்த ஹார்லிக்ஸில் வெல்லம் சேர்க்கப்பட்டுள்ளதால், பாலில் அப்படியே கலந்துக் குடிக்கலாம். சர்க்கரை உபயோகிக்கும் போது அதன் ஊட்டச்சத்துக்கள் குறையக்கூடும் என்பதால் அதைத் தவிர்ப்பது நல்லது.

 மேலும் படிக்க:  சில நிமிடங்களில் சுவையான ஹைதராபாத் மட்டன் கட்லெட் செய்வது எப்படி?

horlicks making tips

இந்தியாவில் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் கர்ப்பிணி பெண்களின் ஆரோக்கியம் போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு ஹார்லிக்ஸ் விற்பனையாகிறது. ஆனால் பிரிட்டனில் பார்லியைக் கொண்டு தயாரிக்கப்படும் பானம், அம்மக்களுக்கு இரவு நேரத்தில் தூக்கத்தை வரவழைப்பதற்காகவே பயன்படுத்தப்படும் சிறந்த பானமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source - Google

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com