Remedies For Acidity: நெஞ்சு எரிச்சலா? எந்த நேரத்திலும் இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

நெஞ்சு எரிச்சலால் அடிக்கடி அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். வீட்டில் உள்ள இந்த உணவுகளை சாப்பிடுங்கள் நெஞ்சு எரிச்சல் உடனடியாக சரியாகும்.

 
heartburn relief and remedies easy

நெஞ்சு எரிச்சல் ஒரு முகம் குளிக்க வைக்கும் ஒரு அஜீரண பிரச்சனையாகும். குறிப்பாக அமிலத்தன்மை உடலில் எரிச்சல் உட்டும் அளவிற்கு மோசமான விளைவுகளை கொடுக்கும். நான் சாப்பிடும் மோசமான உணவுகளில் இருந்து அமிலத்தன்மை வெளிப்பாடாகி நெஞ்சு எரிச்சல் ஏற்படும்.

ஆசிட் ரிப்லெக்ஸ் அமிலத்தன்மை என்று அழைக்கப்படும். இந்த வகை பிரச்சினையால் அதிகமான ஆண்கள் பாதிக்கப்படுவார்கள். ஏனென்றால் வெளியே செல்லும்போது கிடைக்கும் துரித பதப்படுத்தப்பட்ட உணவுகளை அடிக்கடி சாப்பிடும் போது நெஞ்சு எரிச்சல் ஏற்படும். இது மோசம் அடையும்போது உடலில் சங்கட்டமான நிலையை ஏற்படுத்தும். இந்த சிக்கலை சரிப்படுத்த உதவும் எளிய உணவு வகை பட்டியலை நாங்கள் தருகிறோம்.

உங்கள் வயிற்றில் அமிலம் உருவாவதை குறைக்கும் உணவுகளின் பட்டியல் உள்ளது. இந்த உணவுகளை வீட்டிலேயே எளிதில் நீங்கள் சாப்பிடும் போது உடனடி நிவாரணம் உங்களுக்கு கிடைக்கும்.

நெஞ்சு எரிச்சலை உடனடியாக சரி செய்யும் உணவுகள்

suffering from heartburn th

பால்

பாலில் உள்ள கால்சியத்தின் ஹைட்ரோகுளோரிக் அமிலங்கள் வயிற்றில் தோன்றும் அதிகப்படியான அமில சுரப்பை கட்டுப்படுத்த உதவும். இதனால் வயிற்றில் உருவாகும் அமிலங்களை கட்டுப்படுத்த முடியும். குளிர்ந்த பாலை நாம் குடிக்க வேண்டும். குளிர்ந்த பால் அமிலத்தன்மையை எதிர்த்து போராடக்கூடிய ஒரு திரவமாகும். இதை வீட்டிலேயே எளிதில் நீங்கள் குடிக்கலாம். இல்லையென்றால் கடைகளில் கிடைக்கும் மில்க் ஷேக், ரோஸ் மில்க் அல்லது பால் கலந்த குளிர்ந்த பால் வகை உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இதனால் வயிற்றில் எரியும் உணர்வு கட்டுப்படுத்தப்பட்டு அமிலத்தன்மை சரி செய்யப்படும்.

ஓமம்

ஓமம் ஒரு சிறந்த மூலிகை பொருளாகும். அனைவரது வீட்டிலும் கட்டாயம் இருக்கும் இந்த பொருளை நெஞ்சு எரிச்சலின் போது தாராளமாக பயன்படுத்தலாம். ஓமம் நெஞ்சு எரிச்சல், அஜீரண கோளாறு மற்றும் வயிற்றுப்போக்கு உபாதைகளுக்கு சிறந்த மூலிகை பொருளாக உள்ளது. ஓமத்தில் உள்ள என்சைம் மற்றும் தைமால் போன்ற மூலப் பொருள்கள் வயிற்றுப் பிரச்சனையும், இரைப்பை பிரச்சனையும் போக்க பெரிதும் உதவுகிறது. ஓமத்தை சிறிதளவு உப்பு சேர்த்து அப்படியே நின்று சாப்பிடலாம் அல்லது தண்ணீரில் ஓமம் சிறிதளவு ஊற வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்தால் நெஞ்சு எரிச்சல் பிரச்சனை குணமாகும்.

துளசி இலைகள்

துளசி இலைகள் புனித துளசி என்று அழைக்கப்படும். இது எளிதில் கிடைக்கும் மூலிகைப் பொருட்களில் ஒன்று. நெஞ்சு எரிச்சல் ஏற்படும் போது துளசி இலைகளை வெறும் வாயில் மென்று உண்ணலாம் அல்லது தண்ணீரை கொதிக்க வைத்து சிறிதளவு துளசி இலைகளை போட்டு சூடு தணிந்த உடன் குடிக்கலாம்.

பெருஞ்சீரகம்

அனைவரது சமையலறையிலும் இருக்கும் மிக முக்கியமான மூலிகை பொருட்களில் ஒன்று பெருஞ்சீரகம் ஆகும். இந்த பெருஞ்சீரகத்தை நெஞ்சு எரிச்சலின் போது தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடித்தால் நெஞ்சு எரிச்சல் உடனடியாக சரியாகும். மேலும் இது வயிற்று வலி மற்றும் வயிறு வீக்கம் போன்ற அறிகுறிகளை குறைக்க உதவுகிறது.

சிட்ரஸ் இல்லாத பழங்கள்

நெஞ்சு எரிச்சலின் போது வாழைப்பழம், ஆப்பிள் போன்ற சிட்ரஸ் இல்லாத பழங்களை நாம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக தர்பூசணி, தேன், பாகற்காய், முலாம்பழம் ஆகியவை சிட்ரஸ் இல்லா பழங்களாகும். இவை ஆசிட் ரிப்ளெக்ஷனுக்கு சரியான தீர்வாகும். வயிற்று பிரச்சனையை சரி செய்யவும் நெஞ்சு எரிச்சலை உடனடியாக போக்க சிட்ரஸ் இல்லாத பழங்களை சாப்பிடுவது நல்லது.

மேலும் படிக்க:வயிற்றில் வரும் ஆசிட் ரிஃப்ளக்ஸை சரி செய்ய உதவும் உணவுகள்!

image source: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP