
உடல் எடை குறைப்பு முதல் குளோயிங் ஸ்கின், என்றும் இளமை என யோகா பெண்களுக்கு பல நன்மைகளை தருகிறது, குறிப்பாக பெண்கள் சீக்கிரத்தில் தோன்றும் வயதான தோற்றத்தை குறைக்கும் ஆற்றல் யோகாவில் உள்ளது. இதை புரிந்து கொண்ட நடிகைகள் பலரும் யோகா செய்வதில் தீவிரம் காட்டி வருகின்றனர். அந்த வகையின் நடிகைகள் பின்பற்றும் யோகா முறைகள் குறித்து இந்த பதிவில் பார்போம்.
நடிகை அனுஷ்காவின் அம்மா பிரபல் யோகா டீச்சர் என்பது அனைவருக்கும் தெரியும். பாலிவுட் பிரபலங்கள் பலரும் மும்பையில் இவரிடம் தான் யோகா பயிற்சி பெருகிறார்கள். அந்த வகையில் நடிகை அனுஷ்காவும் காலை மாலை 2 வேளையும் யோகா செய்வதை மறக்காமல் கடைப்பிடிக்கிறார். அதுமட்டுமில்லை சமீபத்தில் உடல் எடை குறைத்து ஸ்லிம் லுக்கில் வெளியான அனுஷ்காவின் தோற்றத்திற்கும் யோகா தான் காரணமாம்.
இந்த பதிவும் உதவலாம்:யூடியூப்பர் இர்ஃபான் மனைவி யார் தெரியுமா?
தமன்னாவுக்கு யோகா மீது மிகப் பெரிய ஈடுப்பாடு. காலை சூரிய நமஸ்காரம் செய்து தான் தனது நாளையே தொடங்குவார். தமன்னாவின் ஃபிட்னஸ் ரகசியமும் யோகா தான்.

தமிழ் நடிகை அதுல்யா ரவியும் கொரோனா காலக்கட்டத்தில் யோகாவுக்கு மாறினார். கடந்த 3 ஆண்டுகளாக விடாமல் யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். அவரின் வெயிட் லாஸ் சீக்ரெட்டும் யோகா தான் என்பதை பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா யோகாவுக்கு மாறியுள்ளார். பேசிக் யோகா முதல் பயிற்சியாளர்கள் மேற்கொள்ளக்கூடிய யோகா வரை மிகவும் ஈஸியாக செய்து வருகிறார் லாஸ்லியா. தனது இன்ஸ்டாவில் யோகா பயிற்சி செய்யும் புகைப்படங்களையும் லாஸ்லியா வெளியிட்டுள்ளார்.
இந்த பதிவும் உதவலாம்:ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா திரைப்படம் விமர்சனம்
நடிகை நயன் தாரா கட்ந்த 10 ஆண்டுகளாக யோகா பயிற்சி மேற்கொண்டு வருகிறார். மாலை நேரங்களில் யோகா செய்வது அவரின் ரொட்டின். யோகா மூலம் பொறுமை, மன அமைதி கிடைப்பதாகவும் நயன்தாரா கூரியுள்ளார்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com