
நீங்கள் நாள் முழுவதும் எப்படி உணர்வீர்கள் என்பதை உங்கள் காலை பொழுது தான் தீர்மானிக்கிறது. இதற்காக காலை நேரத்தில் உங்கள் உடலுக்கு பயனுள்ள பழக்கங்களை அன்றாடம் மேற்கொள்ள வேண்டும்.
நாள்தோறும் காலை நேரத்தில் பத்து நிமிடங்கள் யோகா பயிற்சி செய்வது, உங்கள் உடலை உற்சாகப்படுத்தி, மனதை அமைதிப்படுத்தி, அன்றைய சவால்களை எதிர்கொள்ள தயார்ப்படுத்தும் செயலாகும். அதன்படி, தினமும் யோகா செய்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இதில் காணலாம்.
எளிய பிராணாயாமம் (Pranayama), நுரையீரலை சீராக்கி, உடலில் ஆக்ஸிஜன் உட்கொள்ளலை மேம்படுத்துகிறது. காலப்போக்கில், இது சோர்வை குறைத்து, இயற்கையாகவே உங்கள் ஆற்றல் மட்டத்தை அதிகரிக்கிறது. நல்ல சுவாசம் என்பது ஆரோக்கியமான வாழ்வின் அடிப்படை அம்சமாகும்.
மேலும் படிக்க: ஜிம்முக்கு செல்ல நேரம் இல்லையா? உங்கள் வலிமையை அதிகரிக்கும் இந்த உடற்பயிற்சிகளை வீட்டிலேயே செய்யலாம்
நீங்கள் சில நிமிடங்கள் செய்யக் கூடிய யோகாசனங்கள், மனதின் குழப்பத்தை குறைக்க உதவுகிறது. இது அன்றாட முடிவுகளை எளிதாக எடுக்க உதவுகிறது. மேலும், உங்கள் மனதை கூர்மையாகவும், தெளிவாகவும் வைத்திருக்க யோகாசனங்கள் பயன்படுகின்றன.

பொதுவாக, மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் (Cortisol) காலையில் அதிகமாக இருக்கும். பத்து நிமிடங்கள் யோகா பயிற்சி செய்வது இந்தக் கார்டிசோலின் அளவைக் குறைக்கிறது. இதனால் உடல் அமைதியாகிறது. மேலும், உங்கள் மனநிலை சமநிலையுடன் இருக்க உதவுகிறது.
மேலும் படிக்க: உங்கள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டுமா? இந்த 5 எளிய பயிற்சிகளை மேற்கொள்ளவும்
சில வகையான யோகாசனங்கள் உங்கள் வயிறு தசைகளை சீராக இயங்க வைக்க உதவுகின்றன. இது சீரான செரிமானத்திற்கு உதவுகிறது. மேலும், நாள் முழுவதும் ஏற்படும் செரிமான கோளாறுகளை தடுக்கிறது.

யோகா என்பது வெறும் உடல் பயிற்சி மட்டுமல்ல; அது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தவும் கற்றுக் கொடுக்கிறது. தினமும் 10 நிமிடங்கள் யோகா செய்வது, அவசரமாக எதிர்வினையாற்றுவதற்கு பதிலாக அமைதியாக பதிலளிக்கும் பழக்கத்தை உருவாக்குகிறது.
காலையில் யோகா செய்வது என்பது உங்களுக்கும், உங்கள் உடலுக்கும் இடையேயான ஒரு சிறிய தனிப்பட்ட உரையாடல் போன்று மாறும். இது உடலின் பேச்சை கேட்கவும், ஆழ்ந்து சுவாசிக்கவும், அன்றைய நாளுக்கான நல்ல எண்ணங்களை மனதில் விதைக்கவும் ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com