herzindagi
youtuber irfan marriage

Youtuber Irfan Wife : யூடியூப்பர் இர்ஃபான் மனைவி யார் தெரியுமா?

யூடியூப்பர் இர்ஃபானுக்கு கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.  இந்த திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன...
Editorial
Updated:- 2023-05-19, 09:39 IST

யூடியூப்பர் இர்ஃபானுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். ஃபுட் ரிவியூ செய்யும் இர்ஃபான் பட்டித்தொடி எங்கும் ஃபேமஸ். ஏகப்பட்ட விருதுகளை வாரி குவித்துள்ளார். அதுமட்டுமில்லை ஏகப்பட்ட நட்சத்திரங்களை நேர்காணல் செய்து கலக்கியுள்ளார். இந்தியாவின் டாப் யூடியூப்பர் வரிசையில் இடம்பிடித்துள்ள இர்ஃபான் அரசியல் பிரபலங்களை பேட்டி எடுத்துள்ளார். இந்நிலையில் கடந்தாண்டு இர்ஃபான் தனக்கு திருமணம் என அறிவித்து இருந்தார். ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்தனர்.

இந்த பதிவும் உதவலாம்:இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்?

ஆனால் சில மாதங்கள் கழித்து தனது திருமணம் நின்றுவிட்டதாக கூறி இருந்தார். அதற்கு காரணம், இருவருக்கும் இடையில் கருத்துக்கள் ஒத்து போகவில்லை எனவும் இர்ஃபான் கூறியிருந்தார். இந்நிலையில் சில சில மாதங்கள் கழித்து இர்ஃபானுக்கு மீண்டும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த முறை திருமணத்தை பற்றி கடைசி வாரம் வரை இர்ஃபான் அறிவிக்கவில்லை. ராம்ஜான் முடிந்த பிறகு இர்ஃபான் தனது திருமண தேதியை அறிவித்தார்.

irfan wife

அதே போல் நடிகர் கமல்ஹாசன், கனிமொழி, ஆளுநர் ரவி போன்ற அரசியல் தலைவர்களை நேரில் தனது திருமனத்திற்காக அழைத்து இருந்தார். அவரின் திருமணத்திற்கு காளிதாஸ் பிரியாணி போடுவது வரை வீடியோவாக வெளியிட்டார். இறுதியாக நேற்று முன் தின இர்ஃபானுக்கு திருமணம் நடந்து முடிந்தது.

பெண் யார் தெரியுமா?

இது பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் ஆகும். இர்ஃபானின் மனைவி பெயர் ஆல்யா. இவர் பிரபல தொழிலதிபரின் மகள் எனவும் சொல்லப்படுகிறது.அதே போல் வெளிநாட்டில் பட்டப்படிப்பு முடித்தவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்:ஐஸ்வர்யா ராஜேஷின் ஃபர்ஹானா திரைப்படம் விமர்சனம்

youtuber irfan wife

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com