herzindagi
image

காலையில் ஒரு பூண்டு சாப்பிட்டால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா? முழு விபரம் இங்கே!

காலையில் வெறும் வயிற்றில் பூண்டு சாப்பிடுவதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
Editorial
Updated:- 2025-11-25, 20:25 IST

காலையில் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் தான் நாள் முழுவதும் நம்மை சுறுசுறுப்பாக வைத்திருக்க முடியும். இதோடு உடலை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என்றால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூண்டு உட்கொள்ளலாம் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இன்றைக்கு காலையில் பூண்டு சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகளைப் பெற முடியும்? என்பது குறித்து அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்:

 

  • பூண்டு குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்துகிறது. இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குபடுத்துகிறது
  • வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்கள் நிறைந்துள்ளதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. மேலும் எவ்வித வைரஸ் பாதிப்புகள் ஏற்படுவதையும் தடுக்கிறது.
  • செரிமான பிரச்சனைகளைத் தவிர்க்க கட்டாயம் பூண்டு உட்கொள்ள வேண்டும்.

  • நார்ச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.
  • தேவையற்ற கலோரிகளைக் குறைத்து உடலைக் கட்டுக்கள் வைத்திருக்க உதவுகிறது.
  • நச்சுகள் மற்றும் பாக்டீரியாக்களிலிருந்து உடலைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிபயாடிக் ஆகவும் பூண்டு செயல்படுகிறது. முகத்தில் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் எது இருந்தாலும் அதைத் தடுப்பதோடு சருமத்தைப் பிரகாசமாக வைத்திருக்க உதவுகிறது.
  • பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளதால் வலி நிவாரணியாகவும் செயல்படுகிறது.

Image source - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com