ஐஸ்வர்யா ராஜேஷ் லீட் ரோலில் நடித்திருக்கும் ஃபர்ஹானா திரைப்படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தின் விமர்சனத்தை காட்டிலும் சர்ச்சை, எதிர்ப்பு, போராட்டம் காரணமாக இந்த படத்தின் கதை இணையத்தில் பேசும் பொருளாகியுள்ளது. இந்த படம் இஸ்லாமிய கருத்துக்களுக்கு எதிரானது எனவும் ஒருசிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லை சில திரையரங்களில் படத்தின் காட்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உண்மையில் படம் சொல்ல வரும் கருத்து என்ன என்பதை விரிவாக பார்ப்போம்.
ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர் படங்களை இயக்கிய இயக்குனர் நெல்சன் வெங்கடேசனின் அடுத்தப்படைப்பு ஃபர்ஹானா. 6 முறை தொழுவது, வீட்டு பணிகளை பார்ப்பது, வேலைக்கு செல்லும் பெண்களை பார்த்து ஏங்குவது என அன்றாடம் அவரின் நாட்கள் நகர்கிறது. அவரின் கணவர் கரிம்(ஜித்தன் ரமேஷ்) மாமனார் வைத்திருக்கும் கடையில் அவருக்கு உதவியாக இருக்கிறார். பெரியதாக வியாபாரம் இல்லாததால் குடும்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டுவதில் தொடங்கி அன்றாட குடும்ப செலவு என பணம் தேவை அதிகம் இருக்கிறது. இதனால் ஃபர்ஹானாவேலைக்கு செல்ல நினைக்கிறார். பர்ஹானாவுக்கு அவரின் கணவர் துணையாக நிற்க, கால் செண்டர் வேலையில் சேர்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்:குஷி படத்தின் முதல் சிங்கிள் வெளியானது
குடும்பத்தின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகிறது. இந்த நேரத்தில் தான் பர்ஹானாவின் குழந்தைக்கு ஆப்ரேஷன் செய்ய வேண்டிய நிலை வருகிறது. அதற்காக அதிக பணமும் தேவைப்படுகிறது. இதை சமாளிக்க கால் செண்டரில் அதிகஇன்சென்டிவ் கிடைக்கும் பிரிவுக்கு ரேவதியிடம் (அனுமோல்) கெஞ்சிசேர்கிறார். அதன் பின்பு பர்ஹானா வாழ்க்கையையே தலைகீழாக மாறுகிறது. கடைசியில் அந்த பிரச்சனையில் இருந்து அவர் விடுப்பட்டாரா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
படம் முழுக்க ஃபர்ஹானாகவே வாழ்ந்து கைத்தட்டல்களை அள்ளுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தடைகளை மீறி வேலைக்கு செல்லும் காட்சிகள் தொடங்கி , நவ நாகரீகமான மற்ற பெண்கள், அவர்களின் உடைகளை ஏங்கி பார்ப்பது, மிகப் பெரிய பிரச்சனையில் சிக்கிய பின்பு அதிலிருந்து தப்பிக்க முடியாமல், கணவரிடமும் சொல்ல முடியாமல் அழுது தீர்ப்பது என ஐஸ்வர்யா ராஜேஷின் நடிப்பு படத்திற்கு மிகப் பெரிய தூண். அதிகம் பேசாமல் மனைவியை புரிந்து கொள்ளும் கணவராக, அவருக்கு புது செருப்பு மாட்டிவிட்டு அனுப்பி வைக்கும் எழை கணவராக ஜித்தன் ரமேஷ் யாதார்த்த நடிப்பை தந்து இருக்கிறார். இவர்களுடன் குக் வித் கோமாளி சக்தி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா ஆகியோர் தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர்.
படத்தின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் செல்வராகவன். இசை கலைஞன் தயாளனாக அவரின் குரலை வைத்தே மொத்த படமும் நகர்கிறது. ஐஸ்வர்யா ராஜேஷ், தயாளனின் முகத்தை பார்க்கும் காட்சி, ரசிகர்களை சீட்டுக்கு நுனியில் செல்ல வைக்கிறது. அதே போல் படத்தின் இண்டர்வெல் பிளாக், பின்னணி இசை ஆகியவை முழுயான த்ரில்லர் அனுபவத்தை தருகின்றன.
இந்த பதிவும் உதவலாம்:இந்த வாரம் ஓடிடியில் என்ன பார்க்கலாம்?
முதல் பாதி பொறுமையாக நகர, 2வது பாதி படத்தில் சூடுப்பிடிக்கிறது. முகம் தெரியாதவருடன் ஏற்படும் நட்பால் ஏற்படும் பிரச்சனைகள், தொலைவழி தொடர்பில் இருக்கும் ஆபத்துக்கள் ஆகியவற்றை பயத்துடன் புரிய வைக்கிறார் இயக்குனர். லாஜிக் மீறல்களும், தயாளனின் பின்புலம் பற்றிய தெளிவான காட்சிகள் இல்லாதது படத்தின் தரத்தை குறைக்கிறது.
அதே போல், இந்த கதையை ஏன் முஸ்லீம் பின்புலத்தில் இருக்கும் பெண்ணை வைத்து இயக்குனர் விளக்குகிறார் என்ற காரணமும் விரிவாக இல்லை. மொத்தத்தில் ஃபர்ஹானா ஏமாற்றம் தராத த்ரில்லர் மூவியாக பாராட்டுக்களை பெறுகிறது.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation