ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் குழந்தை காலம் என்பது மிக மிக முக்கியமானது. குழந்தை பருவ நிகழ்வுகளை நினைத்து பார்க்காத மனிதர்களே இல்லை எனலாம். அந்த வகையில் பிரபலங்களின் குழந்தை பருவ புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் உலா வருவதை பார்க்கலாம். அவர்களின் தீவிரமான ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் இந்த வகையான புகைப்படங்களை ஷேர் செய்து ட்ரெண்டாக்குவார்கள்.
அப்படி அடிக்கடி இணையத்தில் உலா வரும் தமிழ் நடிகைகளின் குழந்தை பருவ புகைப்படங்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.
இந்த பதிவும் உதவலாம்: இன்ஸ்டாவில் இணைந்த விஜய்
நடிகை சமந்தா சென்னை பல்லாவரத்தில் பிறந்து வளர்ந்தவர். ஹோலி ஏஞ்சல்ஸ் ஸ்கூலில் படித்தவர். பின்பு தனது பட்டப்படிப்பை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் முடித்தார். அவரின் குழந்தை பருவ புகைப்படங்களை அடிக்கடி இணையத்தில் பார்க்கலாம். அதே போல் காலேஜ் ஆண்டு விழாவில் பிங்க் நிற சேலையில் சக மாணவிகளுடன் சமந்தா நிற்கும் புகைப்படமும் இணையத்தில் அடிக்கடி ஷேர் செய்யப்படும்.
நடிகை த்ரிஷா மிஸ் சென்னை பட்டம் வென்றவர். இவரும் சென்னையில் பிறந்து வளர்ந்தவர். எத்திராஜ் காலேஜில் தனது படிப்பை முடித்த த்ரிஷாவின் குழந்தை பருவ புகைப்படங்கள் ஏகப்பட்டது இணையத்தில் இதுவரை வெளியாகியுள்ளது.
நடிகை அனுஷ்காவின் அம்மாவின் பிரபல யோகா டீச்சர் என்பது அனைவரும் அறிந்தது. தனது அம்மாவுடன் அனுஷ்காவின் கியூட் குழந்தை பருவ புகைப்படங்கள் ரசிகர்களிடம் அதிக லைக்ஸ்களை அள்ளியுள்ளன.
நடிகை நித்யா மேனன் கேரளாவை சேர்ந்தவர். குழந்தை நட்சத்திரமாகவும் அறிமுகம் ஆனவர். இவரின் கியூட் குழந்தை பருவ புகைப்படம் இணையத்தில் சமீபத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது.
கியூட் பேபி டால் ஹன்சிகா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். தமிழில் ஒளிப்பரப்பான ஷக்க லக்கா பூம் பூம் தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து இருப்பார். இவரின் குழந்தை பருவ புகைப்படமும் அடிக்கடி சோஷியல் மீடியாவில் உலா வரும்.
இந்த பதிவும் உதவலாம்:பத்து தல மற்றும் விடுதலை பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன்
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com