கோலிவுட்டின் உச்ச நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். வாரிசு வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் நடிகை த்ரிஷா, கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கிங், மன்சூர் அலிகான் ஆகியோர் நடித்து வருகின்றனர். படம் குறித்த எதிர்பார்ப்பு மிகப் பெரிய அளவில் உள்ளது.
வரும் தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. லியோ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்து முடிந்தது. இந்த புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் படு வைரலாகின.
இந்த பதிவும் உதவலாம்:குவியும் பாராட்டு.. எப்படி இருக்கிறது விடுதலை பார்ட் 1 ?
இந்நிலையில் நடிகர் விஜய் இன்ஸ்டாவில் இணைந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். நடிகர் விஜய் ஏற்கெனவே ட்விட்டரில் இருக்கிறார். ட்விட்டரில் அவரை 4 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர். இந்நிலையில் நேற்றைய தினம் விஜய் இன்ஸ்டாவிலும் இணைந்தார். இன்ஸ்டாகிராம் தொடங்கிய உடனே நடிகர் விஜய் பல உலக சாதனைகளையும் நிகழ்த்தி விட்டார்.
அதன்படி இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கியதும் 1 மில்லியன் பாலோவர்களை எட்டிய பிரபலங்களின் பட்டியலில் நடிகர் விஜய் 3வது இடத்தை பிடித்துள்ளார். அதுமட்டுமில்லை இன்ஸ்டாகிராமில் அதிக லைக்குகளை பெற்ற கோலிவுட் நடிகரின் புகைப்படம் என்கிற சாதனையையும் நடிகர் விஜய் படைத்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஜய் பதிவு செய்த முதல் புகைப்படத்திற்கு 4 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ் குவிந்து வருகிறது. நடிகர் விஜய்யின் இந்த இன்ஸ்டாகிராம் என்ட்ரியை ரசிகர்கள் கொண்டாti வருகின்றனர்.
இந்த பதிவும் உதவலாம்:தமன்னாவின் டயட் ரகசியம் என்ன தெரியுமா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com