
பெற்றோராவது என்பது ஒருவரின் வாழ்வில் மிகவும் உற்சாகமான அதே சமயம் சவால்கள் நிறைந்த ஒரு பயணம். பிறந்த முதல் சில வாரங்களும், மாதங்களும் தூக்கமில்லாத இரவுகள் போன்ற பல சவால்கள் நிறைந்திருக்கும்.
புத்தகங்கள், வலைப்பதிவுகள் மற்றும் நாம் சந்திப்பவர்கள் கொடுக்கும் ஆலோசனைகள் நமக்கு மேலும் குழப்பத்தை ஏற்படுத்தக் கூடும். ஆனால், ஒவ்வொரு குழந்தையும் தனித்துவமானதாக இருந்தாலும், புதிய பெற்றோர் பலரும் செய்யும் சில பொதுவான தவறுகள் உள்ளன. அவற்றை தவிர்ப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையை சீராக கொண்டு செல்ல முடியும்.
மேலும் படிக்க: பதின்பருவ பிள்ளைகளின் பெற்றோரா நீங்கள்? உங்கள் குழந்தைகளுடன் ஆரோக்கியமான உறவை மேம்படுத்த 7 எளிய வழிமுறைகள்
ஒப்பிடுவது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாதது. உங்கள் உறவினரின் குழந்தை மூன்று மாதங்களிலேயே இரவு முழுவதும் தூங்குகிறது. ஆனால், உங்கள் குழந்தை இன்னும் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை விழித்துக் கொள்கிறது என்று நீங்கள் நினைக்கலாம். இவ்வாறு ஒப்பிடுவது தேவையற்ற மன அழுத்தத்தை மட்டுமே உருவாக்கும். குழந்தைகள் தங்கள் சொந்த வேகத்தில் வளர்கின்றனர். இந்த பெரும்பாலான வேறுபாடுகள் பள்ளியில் சேரும் வயதிற்குள் சரியாகி விடும். உங்கள் குழந்தையின் வளர்ச்சியை கவனிப்பதில் கவனம் செலுத்துங்கள்.

மேலும் படிக்க: Postpartum depression: பிரசவத்திற்கு பின்னர் பெண்களுக்கு ஏற்படும் மனச்சோர்வு; தடுப்பதற்கான எளிய வழிமுறைகள்
பல நேரங்களில் அத்தியாவசியம் இல்லாத பொருட்களை குழந்தைகளுக்காக நாம் வாங்குகிறோம். ஆடம்பரமான ஊஞ்சல்கள், அதிநவீன மானிட்டர்கள் ஆகியவை பெற்றோருக்குரிய வேலையை எளிதாக்குவதாக பல விளம்பரங்களில் கூறப்படுகிறது. ஆனால், இவை எதுவும் உங்கள் குழந்தைகளுக்கு தேவை இல்லை. எனவே, வசதியான ஆடைகள், தேவையான விளையாட்டு பொருட்கள், டயப்பர்கள் போன்றவற்றை மட்டுமே வாங்க வேண்டும்.
புதிதாக பெற்றோராகி இருக்கும் பலர் எல்லாவற்றையும் தனியாக சமாளிக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள், ஆனால் பெற்றோராக இருப்பது ஒருபோதும் தனியாக மேற்கொள்ளக் கூடிய வேலை அல்ல. கடந்த காலத்தில், கூட்டுக் குடும்பங்கள் மற்றும் அண்டை வீட்டார் பெரும்பாலும் உதவியுள்ளனர். தனிமைப்படுத்திக் கொள்வது விரைவில் சோர்வுக்கு வழிவகுக்கும். உதவி கேட்பது பலவீனம் அல்ல. அது உங்களுக்கு ஒரு ஆதரவு அமைப்பை உருவாக்கி கொள்வதை குறிக்கிறது. இக்காலத்தில், உதவி கேட்பது என்பது ஒரு நண்பரை அழைப்பது, அல்லது தாத்தா, பாட்டியை பார்க்கச் சொல்வது போன்றதாக இருக்கலாம். இரவில் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை பகிர்ந்து கொள்வது, முடிவுகளை ஒன்றாக விவாதிப்பது மற்றும் ஒருவருக்கொருவர் ஆதரவளிப்பது போன்றவற்றை பெற்றோர் கடைபிடிக்கலாம்.

தூக்கமில்லாத இரவுகள் மற்றும் முடிவில்லாத வேலைகளின் குழப்பத்தில், அந்த அற்புத தருணங்களை ரசிக்கத் தவறிவிடுவது எளிது. குழந்தை சிறிதாகக் கொட்டாவி விடுவது, உங்கள் விரலை சுற்றிக் குழந்தையின் கை மடங்குவது, குழந்தையின் புன்னகை போன்ற தருணங்கள் வேகமாக மறைந்துவிடும். இந்த சிறிய இன்பங்களை அனுபவிக்க மறந்துவிடாதீர்கள். ஒரு நாள் நீங்கள் திரும்பிப் பார்க்கும் போது, இவைதான் உங்களுக்கு மிகவும் முக்கியமான நினைவுகள் என்பதை உணர்வீர்கள்.
இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.
Image Credit: Freepik
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com