sruthi met famous bollywood actress

Sruthi Raj : பாலிவுட்டின் உச்ச நடிகையை நேரில் சந்தித்த சன் டிவி சீரியல் நடிகை ஸ்ருதிராஜ்

சன் டிவி சீரியல் நடிகை ஸ்ருதிராஜ், பாலிவுட் நடிகை வித்யா பாலனை நேரில் சந்தித்து இருக்கிறார். இந்த புகைப்படத்தை ஸ்ருதி, தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார்.
Editorial
Updated:- 2023-02-28, 10:26 IST

தொலைக்காட்சி நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. சொல்லப்போனால் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் பல நடிகைகள், சின்னத்திரையில் இருந்து சென்றவர்கள். அதிலும் விஜய் டிவி பிரபலங்கள் பற்றி சொல்லவே வேண்டாம். விஜய் டிவியில் 2 ஷோவில் வந்தால் போதும், வெள்ளித்திரையில் உடனே நடிக்க வாய்ப்பு கிடைத்து விடுகிறது. தங்களது முழு திறமையை வெளிப்படுத்தும் அவர்கள், அடுத்தடுத்து உயரத்திற்கு செல்கின்றனர்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிப்பரப்பான ஆபீஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ருதிராஜ். இவரின் சினிமா பயணம் சற்று வித்தியாசமானது. வெள்ளித்திரையில் இருந்து சின்னத்திரைக்கு வந்து ஜொலிக்க தொடங்கினார். நடிகர் விஜயின் ’மாண்புமிகு மாணவன்’ படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், ஜெர்ரி போன்ற ஒருசில படங்களில் நடித்தார்.

இந்த பதிவும் உதவலாம்:கதையின் நாயகி.. ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றி பயணம்!

அதன் பின்பு, சன் டிவியில் ஒளிப்பரப்பான தென்றல் சீரியல் மூலம் சின்னத்திரையில் நுழைந்தார். ஆங்கர் தீபக் இதில் ஹீரோவாக நடிக்க, துளசி என்ற ரோலில் ஸ்ருதிராஜ் நடித்தார். இவர்களின் ஜோடி செம்ம ஹிட்டடித்தது. ரசிகர்கள் ஸ்ருதிக்கு பயங்கர வரவேற்பு கொடுத்தனர். அதனையடுத்து, விஜய் டிவி ஆபீஸ் சீரியலில் நடித்தார். இந்த சீரியலும் ஸ்ருதிக்கு பெரும் ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. ஃபேன்ஸ் கூட்டமும் அதிகமானது. தற்போது சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் ’தாலாட்டு’ சீரியலில் ஸ்ருதிராஜ் லீட் ரோலில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் ஸ்ருதி சமீபத்தில் பாலிவுட் நடிகை வித்யாபாலனை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். அவருடன் புகைப்படமும் எடுத்து இருக்கிறார். இந்த ஃபோட்டோவை பயங்கர மகிழ்ச்சியில் தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அந்த பதிவில் ‘உங்களை சந்தித்ததில் எனக்கு பெருமகிழ்ச்சி’ என குறிப்பிட்டுள்ளார்.

sruthi met vidya balan

இந்த ஃபோட்டோவுக்கு லைக்ஸ் குவிந்து வருகின்றன. அதுமட்டுமில்லை வித்யா பாலனை சந்தித்த ஸ்ருதி, ரொம்ப லக்கி எனவும் கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த பதிவும் உதவலாம்:மிஸ் செய்யக்கூடாத சிறந்த தமிழ் வெப் சீரிஸ்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Image Credit: Google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com