herzindagi
image

மாரடைப்பை உணர்த்தும் 5 அறிகுறிகள்; இவற்றை உணர்ந்தால் உடனடி மருத்துவ ஆலோசனை அவசியம்

மாரடைப்பை உணர்த்தும் 5 முக்கிய அறிகுறிகள் குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். இவற்றில் ஏதேனும் ஒன்றை உணர்ந்தால் கூட உடனடியாக மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும்.
Editorial
Updated:- 2025-12-14, 11:55 IST

மாரடைப்பு என்பது திடீரென்று வருவது அரிது. அது நிகழ்வதற்கு சில நாட்கள் அல்லது வாரங்களுக்கு முன்பே நம் உடல் சில எச்சரிக்கை அறிகுறிகளை கொடுக்க தொடங்குகிறது.

மாரடைப்பை உணர்த்தும் 5 அறிகுறிகள்:

 

ஆனால், பலரும் இவற்றை சாதாரண அசிடிட்டி, சோர்வு அல்லது குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பொதுவான உடல்நல கோளாறுகளாக தவறாக புரிந்து கொள்கிறார்கள். மாரடைப்பு வருவதற்கு முன் உங்கள் உடல் கொடுக்கும் 5 முக்கியமான அறிகுறிகள் இதில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை தற்போது காணலாம்.

 

அதீத வியர்வை:

 

குளிர்ச்சியான சூழலில் இருக்கும் போதும் உங்களுக்கு அளவுக்கு அதிகமாக வியர்த்தால், உங்கள் இருதயம் சிரமப்படுகிறது என்பதற்கான அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக, திடீரென்று ஏற்படும் குளிர்ந்த வியர்வை, மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்னர் உங்கள் உடல் தன்னை ஒழுங்குபடுத்த முயற்சிக்கும் நிலையின் அறிகுறியாகும்.

 

உடலின் இடது பக்கத்தில் வலி:

 

மாரடைப்பின் மிகவும் அறியப்பட்ட அறிகுறிகளில் ஒன்று இடது கையில் ஏற்படும் வலி ஆகும். இருப்பினும், இந்த அசௌகரியம் இடது தோள்பட்டை, மார்பு அல்லது முதுகு பகுதிக்கும் கூட பரவலாம். வலி லேசாக தொடங்கி படிப்படியாக அதிகரித்தால், உடனடியாக மருத்துவ உதவியை நாடுவது அவசியம்.

Body pain

 

மேலும் படிக்க: இளம் தலைமுறையினரிடம் அதிகரிக்கும் மாரடைப்பு அபாயம்; இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய வழிகள் இதோ

 

சோர்வு அல்லது அதிக களைப்பு:

 

போதுமான ஓய்வு எடுத்த பிறகும் நீங்கள் அசாதாரணமாக சோர்வாக உணர்ந்தால், அது இருதய பிரச்சனையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். படிக்கட்டுகளில் ஏறுவது, நடப்பது அல்லது மளிகை பொருட்களை சுமப்பது போன்ற எளிதான வேலைகளை செய்யும் போதும் நீங்கள் களைப்பாக உணர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.

மேலும் படிக்க: மழைக்காலத்தின் போது நோய்த் தொற்றுகளில் இருந்து உங்களை தற்காத்துக் கொள்வதற்கான 5 முக்கிய குறிப்புகள்

 

குறைந்த இரத்த அழுத்தம்:

 

இரத்த அழுத்தத்தில் ஏற்படும் திடீர் வீழ்ச்சி இருதயத்தில் சிக்கல் இருப்பதை குறிக்கலாம். உங்களுக்கு அடிக்கடி தலைசுற்றல் அல்லது மயக்கம் வருவது போல் உணர்ந்தால், உங்கள் இருதயம் இரத்தத்தை சரியாக நிர்வகிக்கவில்லை என்று அர்த்தமாகலாம். தொடர்ச்சியான குறைந்த இரத்த அழுத்தத்தை கட்டாயம் மருத்துவரிடம் பரிசோதித்துக் கொள்ள வேண்டும்.

Low blood pressure

 

பசியின்மை:

 

பசியின்மை ஏற்படுவது அல்லது மிகக் குறைவாக சாப்பிட்ட பிறகும் வயிறு நிரம்பியது போல் உணர்வது ஒரு எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இதற்குக் காரணம், சீரற்ற இரத்த ஓட்டம் செரிமானத்தை பாதிப்பதாகும். குமட்டல் அல்லது வயிறு அசௌகரியம் ஆகியவை பசியின்மையுடன் சேர்ந்து இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

 

இந்த அறிகுறிகள் அனைத்தும் இருந்தால் மட்டுமே மாரடைப்பு என்று அர்த்தமல்ல. ஆனால், இந்த அறிகுறிகளை தொடர்ந்து நீங்கள் உணர்ந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது தேவையற்ற சிக்கல்களை தவிர்க்க உதவும்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com