Pattu Saree Photos : பட்டு புடவையில் பட்டையை கிளப்பும் தமிழ் நடிகைகள்

பட்டு புடவையில் ஜொலிக்கும் தமிழ் நடிகைகளின் புகைப்படங்களை இந்த பதிவில் பார்ப்போம். நயன்தாரா தொடங்கி சமந்தா, காஜல் அகர்வால் வரை பட்டுப்புடவையில் கலக்குகிறார்கள். 

actress in saree look

தமிழ் நடிகைகள் பலரும் ஆன் ஸ்கீரினில் சல்வார், வெஸ்டர்ன், பாவாடை தாவணி போன்ற உடைகளில் தான் அதிகம் உலா வருவார்கள். ஆனால் விருது நிகழ்ச்சி, சினிமா நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா, கடை திறப்பு விழா போன்றவற்றுக்கு வருகை தந்தால் சூப்பரான காஞ்சிபுரம் பட்டில் பயங்கர ஹோம்லியாக என்ட்ரி கொடுப்பார்கள். அவர்களின் புகைப்படங்களும் இணையத்தில் உடனே வைரலாக தொடங்கும். அந்த வகையில் இந்த பதிவில் நடிகைகள் பட்டுப்புடவையில் தோன்றிய புகைப்படங்களை பார்ப்போம் வாருங்கள்.

த்ரிஷா

பொன்னியின் செல்வன் இசை வெளியீட்டு விழா தொடங்கி சமீப காலமாக த்ரிஷா அதிகம் சில்க் புடவைகளை பயன்படுத்த தொடங்கியுள்ளார். அதிலும் ட்ரெண்டிங்கில் இருக்கும் லைட் வெயிட் சில்க் சாரி, காப்பர், சில்வர் டிஷூ சில்க் சாரி ஆகியவை த்ரிஷாவின் ஃபேவரெட்டாம். சமீபத்தில் பேபி பிங்க் கலரில் த்ரிஷா கட்டியிருந்த பனராஸ் பட்டு இணையத்தில் பயங்கர வைரலானது.

samantha saree

நயன்தாரா

புடவை விஷயத்தில் நயன்தாரா அதிக கவனம் எடுத்து கொள்வார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அவர் தேர்தெடுக்கும் புடவை தொடங்கி அதற்கு அவர் அணியும் பிளவுஸ், ஹேர் ஸ்டல், மேக்கப் எல்லாமே ட்ரெண்டாகும். சில்க் சாரியில் பெரும்பாலும் நயன், டார்க் கலர்களை தேர்ந்த்டுப்பார். அதே போல் பிலைன், சின்ன பார்டர் புடவைகள் அவரின் ஃபேவரெட்.

இந்த பதிவும் உதவலாம்:அத்தனையும் பொய்யா? சிக்கன் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா!

சமந்தா

ஃபேஷன் குயின் சமந்தா, சமீபத்தில் கடை திறப்பு ஒன்றுக்கு அணிந்து வந்திருக்க சில்வர் டிஷூ சில்க் சாரி, இனையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இடம் பிடித்தது. செமி ஹோம்லி லுக் சமந்தாவின் ஃபேவரெட். அதே போல் லைட் கலர், எவி வொர்க் புடவைகளை அதிகம் அணிவார் சமந்தா.

sai pallavi saree

சாய்பல்லவி

சாய்பல்லவிக்கு மிகவும் பிடித்த உடை புடவை. பெரும்பாலும் பல்லவின் பிளைன் அண்ட் சிம்பிள் புடவைகளை தான் அதிகம் விரும்பி அணிவார். சமீபத்தில் கோல்டான் கலர் டிஷூ சில்க் சேரியில் அவரின் லுக் அனைவரையும் வாவ் சொல்ல வைத்திருந்தது.

இந்த பதிவும் உதவலாம்:இத்தனை நன்மைகளா! யோகாவுக்கு மாறிய தமிழ் நடிகைகள்

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP