Rashmika Mandanna : அத்தனையும் பொய்யா? சிக்கன் விளம்பரத்தில் நடித்து சர்ச்சையில் சிக்கிய ராஷ்மிகா மந்தனா!

பிரபல நிறுவனத்தின் சிக்கன் விளம்பரத்தில் நடித்ததால் சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ளார் நடிகை ராஷ்மிகா மந்தனா.  என்ன சர்ச்சை என்பதை இந்த பதிவில்  பார்ப்போம்.

rashmika mandanna troll news

நேஷ்னல் க்ரஷ் என அழைக்கப்படும் ராஷ்மிகா, அடிக்கடி சர்ச்சையில் சிக்குவது வாடிக்கையாக மாறி விட்டது. கன்னடத்தில் அறிமுகமான ராஷ்மிகாவுக்கு டோலிவுட்டில் பயங்கர எதிர்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கு காரணம், ராஷ்மிகா கொடுத்த சில பேட்டிகள் மற்றும் அவரிடம் ரசிகர்கள் கண்ட மாற்றங்கள். தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என கலக்கி கொண்டிருக்கிறார் ராஷ்மிகா. அதுமட்டுமில்லை, அவரின் நடிப்பில் புஷ்பா 2 கூடிய விரைவில் ரிலீஸாகவுள்ளது.

இந்நிலையில் ராஷ்மிகா பர்கருக்கு பெயர் போன பிரபல நிறுவனத்தின் பிரைட் சிக்கன் விளம்பரத்தில் நடித்தார். அந்த விளம்பரம் இணையத்தில் பெரும் விவாவத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, அந்த விளம்பரத்தில் ராஷ்மிகா காரசாரமான டேஸ்டி பிரைட் சிக்கனை விரும்பி கடித்து சாப்பிடுவது காட்சிகள் உள்ளன. ஆனால் ராஷ்மிகா சுத்த சைவம் என்பது தான் இந்த சர்ச்சைக்கான காரணம்.

rashmika ad

அதாவது ராஷ்மிகா இதற்கு முன்பு அளித்த பேட்டியில் தான் சுத்த சைவம் என கூறியிருந்தார். ஆனால் தற்போது சிக்கன் விளம்பரத்தில் அவர் பிரைட் சிக்கனை ருசித்து சாப்பிட்டு இருப்பதை நெட்டிசன்கள் விமர்சித்துள்ளனர். எது உண்மை? என கேட்டுள்ளனர். அல்லது விளம்பரத்திற்காக சிக்கன் சாப்பிடுவது போல் நடிக்கிறாரா? அல்லது இப்போது அசைவத்திற்கு மாறி விட்டாரா? எனவும் கேட்டுள்ளனர்.

இணையத்தில் இது மிகப் பெரிய விவாவத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், ராஷ்மிகாவின் ரசிகர்கள் சிலர், இது அவரின் விருப்பம் என ரஷ்மிகாவுக்கு ஆதரவாகவும் சில கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். வழக்கம் போல் ராஷ்மிகாவின் இந்த செயலும் சர்ச்சையில் சிக்க்யுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்:குஷி படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸ்.. விஜய் தேவர்கொண்டா - சமந்தாவின் வேறலெவல் கெமிஸ்ட்ரி

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP