herzindagi
tv actress news

Serial Actress Shalini Divorce Photoshoot : விவாகரத்து பெற்றதை வேற லெவலில் கொண்டாடிய சீரியல் நடிகை

பிரபல சீரியல் நடிகை ஷாலினி விவாகரத்து பெற்றதை ஃபோட்டோஷூட் செய்து கொண்டாடி இருக்கிறார். ஷாலினியின் இந்த டைவர்ஸ் ஃபோட்டோஷூட்  இணையத்தில் செம்ம வைரல்
Editorial
Updated:- 2023-05-05, 19:26 IST

அண்மை காலமாக பிரபலங்களின் விவாகரத்து அறிவிப்புகள் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாக மாறி வருகின்றன. வெள்ளித்திரை, சின்னத்திரை இரண்டிலுமே இதுப்போன்ர அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகின்றன. வழக்கமாக இதுப்போன்ற செய்தியை பிரபலங்கள் சமூகவலைத்தளங்களில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். 5 வரிக்கு மிகாமல் விளக்கம் கொடுத்து கடைசியாக பிரிந்து விட்டோம் என்பார்கள். இந்த பதிவுக்கு கருத்துக்களும் விமர்சனங்களும் குவியும். சமந்தா, தனுஷ் போன்ற உச்ச நட்டசத்திரங்கள் இதை தான் செய்தனர்.

இந்த பதிவும் உதவலாம்:ரஜினிக்கு அப்படியொரு ஹிட் . காலத்தால் அழிக்க முடியாத மனோபாலாவின் திரைப்பயணம்

இந்நிலையில் பிரபல சீரியல் நடிகை இதற்கு ஒருபடி மேலே சென்று விவாகரத்து பெற்றதை ஃபோட்டோஷூட் வைத்து கொண்டாடி அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அவர் வேற யாருமில்லை பிரபல சீரியல் நடிகை ஷாலினி. இவர் சன் டிவியி, விஜய் டிவி சீரியலில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லை ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சி, விஜய் டிவியில் காமெடி ஷோ போன்றவற்றிலும் கலக்கி இருக்கிறார்.

shalini instagram

ஷாலினி கடந்த ஆண்டு பிரபல யூடியூப் சேனலில் பேட்டி ஒன்று அளித்திருந்தார். அதில் திருமண வாழ்க்கையால் அடி, உதை போன்ற துன்பங்களை அனுபவித்தாக கூறி இருந்தார். அதுமட்டுமில்லை துபாயை சேர்ந்த தனது கணவர் ஏற்கெனவே 2 முறை திருமணம் ஆனவர், ஏமாற்றி தனனை திருமணம் செய்து கொண்டதாகவும் கூறி இருந்தார். அப்போதே விவாகரத்து அப்ளை செய்து இருப்பதாக கூஏஇ இருந்தார். ஷாலினிக்கு 8 வயதில் மகள் ஒருவர் இருக்கிறார். இவர்கள் இருவரும் ஜீ தமிழ் சூப்பர் மாம் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் ஷாலினிக்கு தற்போது சட்டப்படி விவாகரத்து கிடைத்து இருக்கிறது. அதை கொண்டாடும் விதமாக ’டைவர்ஸ் ஃபோட்டோஷூட்’ ஒன்றை நடத்தியுள்ளார். இந்த ஃபோட்டோஷூட்டில் டைவர்ஸ் என்ற ஸ்டிக்கரை பிடித்தப்படி வித விதமான போஸ்களை கொடுத்துள்ளார். இணையத்தில் ஷாலினியின் இந்த ஃபோட்டோஷூட்டுக்கு கமெண்டுகள் குவிந்து வருகின்றன.

இந்த பதிவும் உதவலாம்:பொன்னியின் செல்வன் 2 சிறுவயது குந்தவை யார் தெரியுமா?

சிலர், இதை வரவேற்றும் வழக்கம் போல் சிலர் இதை கடுமையாக விமர்சித்தும் கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com