உலக நாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன் 3 திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். சிங்கர், மியூசிக் ஆல்பம், ராப் என பல திறமைகளை உள்ளடக்கியவர். தமிழ் மட்டுமில்லை தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் பல படங்களில் ந்டித்துள்ளார். தற்போது வெளிநாட்டில் இருக்கிறார். அவ்வப்போது சென்னையும் வருவார்.
ஸ்ருதிஹாசன் எப்போதுமே மிகவும் போல்ட்டான நடிகை என பெயர் வாங்கியவர். மனதில் பட்ட கருத்துக்களை மிகவும் தைரியமாக முன் வைப்பார். இன்ஸ்டாவில் பயங்கர ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி அதிகப்படியான புகைப்படங்களை வெளியிடுவார். சமீபத்தில் ஜிமில் வொர்க்கவுட் செய்ய்ம் வீடியோக்களை, புகைப்படங்களை வெளியிட்டார். கூடவே,பிசிஓஎஸ் பிரச்சினைகளையும் வளர்சிதை மாற்றங்களையும் சந்தித்து வருவதாகவும், ஆனால் அந்த சவால்களை ஏற்றுக்கொண்டு முறையான உடற்பயிற்சி, ஆரோக்கியமான உணவு, சரியான நேரத்திற்கு தூக்கம் என தற்போது ஆரோக்கியமாக இருப்பதாகவும் தெரிவித்து இருந்தார்.
இந்த பதிவும் உதவலாம்:உடல் எடையை கங்கனா எப்படி குறைத்தார் தெரியுமா?
எனவே இந்த பதிவில் ஸ்ருதி உடலை கட்டுக்க்கோப்பாக வைத்துக் கொள்ள பின்பற்றும் டயட் பிளான் பற்றியும் வெயிட் லாஸ் குறித்தும் பார்ப்போம்.
டயட்
ஸ்ருதி ஹாசன் முற்றிலும் ஹோட்டல் உணவுகளை தவிர்த்து விட்டார். முழுக்க முழுக்க வீட்டில் சமைக்கும் உணவுகளை மட்டுமே எடுத்து கொள்கிறார். அசைவ உணவுகளையும் தவிர்த்து விட்டாராம். அதுமட்டுமில்லை ஆல்கஹால் போன்ற விஷயங்களையும் அறவே தவிர்த்து விடுகிறாராம். இந்திய உணவுகளை மட்டுமே டயட் பிளானில் எடுத்து கொள்கிறார்.
வொர்க்க்வுட்
ஜிம் வொர்க்கவுட் காலை மற்றும் மாலை 2 வேளையும் தவறாமல் கடைப்பிடிக்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் டான்ஸ் ஆடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.
ஹேர் ஸ்விங்
சமீபத்தில் பிரபலங்கள் பலரும் பின்பற்றும் ஹேர் ஸ்விங் உடற்பயிற்சியையும் ஸ்ருதி ஹாசன் முறையாக எடுத்து கொள்கிறார். இந்த பயிற்சி தான் கொரோனாவின் போது ஸ்ருதி ஹாசனின் உடல் எடையை குறைக்க உதவியதாம்.
இந்த பதிவும் உதவலாம்:அழகோ அழகு! பாவ்னியின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதானா?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: google
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation