அப்பாவுக்கு மொழி மீது காதல் இல்லை பெங்காலி நடிகை மீது தான்- ஸ்ருதி ஹாசன்

'பெங்காலி மொழி கற்றுக்கொள்ள அம்மாநில நடிகை அபர்ணா சென் தான் காரணம்' என அப்பாக்குறித்து சுவாரஸ்சிய உண்மையைப் போட்டுடைத்தார் ஸ்ருதி ஹாசன்.  
image
image

தமிழ் திரையுலகில் மட்டுமல்ல உலக சினிமாவில் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்திருப்பவர் தான் உலக நாயகன் கமல்ஹாசன். நடிப்புத் திறமை ஒருபுறம் இருந்தாலும் பரதத்தில் சிறந்து விளங்குவது முதல் பிற மொழிகளை ஆர்வத்துடன் கற்றுக்கொள்வது போன்ற தனித்திறமைகள் தான் இந்த இடத்திற்கு கமலைக் கொண்டு வந்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது. தமிழகத்தில் பரமக்குடியில் பிறந்திருந்தாலும் தமிழ் மொழி மட்டுமல்ல இந்தி, கன்னடம், பெங்காலி, தெலுங்கு, மலையாளம், பிரெஞ்சு, ஆங்கிலம் என கிட்டத்தட்ட 8 மொழிகளை ஸ்டைல்லாக பேசும் திறமைக் கொண்டவர் தான் கமல்.

aparna (1)

இதுவே திரையுலகில் கால் பதித்து நிற்க பேருதவியாக இருந்துள்ளது. இந்நிலையில் தான் சமீபத்தில் நடிகர் சத்யராஜ் மற்றும் ஸ்ருதி ஹாசன் இடையே நடந்த உரையாடல் ஒன்று இணையத்தில் வைரலானது. அதில், “ உனக்கு அனைத்து மொழிகளுக்கு தெரியும். இது ஜெனிடிக் அதாவது மரபு ரீதியாக வந்திருக்கும். எப்படி உனது அப்பா எந்த மொழிகளையும் சட்டென்று கற்றுக்கொள்கிறார். இது போன்று தான் நீயும் என்று கூறியதோடு பெங்காலி மொழி சினிமாவில் அவர் நடித்தார் அல்லவா? என சத்யராஜ் கூற உடனே அதை மறுத்த ஸ்ருதி ஹாசன். மொழி தான் ஆசை தான். ஆனால் பெங்காலி மொழியை சினிமாவிற்காக கற்றுக்கொள்ளவில்லை.

அந்த கால கட்டத்தில் அவர் பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது காதல் கொண்டிருந்தார். அவரை கவர வேண்டும் என்றும், அந்த காதலின் வெளிப்பாடு தான் பெங்காலி கற்றுக்கொள்ள காரணமாக அமைந்தது எனவும், ஹே ராம் படத்தின் ராணி முகர்ஜீயின் பெயர் அபர்ணா என்று தான் வைத்தார் என சுவாரஸ்சிய உண்மையை போட்டுடைத்தார் நடிகை ஸ்ருதி ஹாசன். இந்த வீடியோ வெளியானதையடுத்து பல்வேறு லைக்குகளையும்,கமெணட்டுகளையும் எக்ஸ் தள பக்கத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கமலின் தனிப்பட்ட வாழ்க்கை:

திருமண வாழ்க்கையில் பல்வேறு சர்ச்சைகளை கடந்து வருகிறார் கமல்ஹாசன். 1978 ல் வானி கணதியை திருமணம் செய்துக் கொண்டார். சரிகா மீது காதல் கொண்டிருந்தார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு சரிகாவை திருமணம் செய்துக் கொண்டார். பின்னர் கௌதமியுடன் சேர்ந்து வாழ்ந்தார். இறுதியில் இவர்களைப் பிரிந்து தன்னுடைய கட்சிப் பணிகளைப் பார்த்து வந்த இவர் தற்போது நா்டாளுமன்றத்தில் மாநிலங்களவை எம்பியாக உள்ளது. தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தாலும் சினிமா உலகில் இவரின் திறமையை எப்போதும் பாராட்டியே ஆக வேண்டும்.

Image credit - Instagram

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP