herzindagi
bb pavani reddy

Pavani Reddy Workout : அழகோ அழகு! பாவ்னியின் ஃபிட்னஸ் ரகசியம் இதுதானா?

பிக் பாஸ் புகழ் பாவ்னியின் அழகு மற்றும் ஃபிட்டனஸ் ரகசியம் குறித்து இந்த பதிவில் பார்க்க போகிறோம். பாவ்னிக்கு 33 வயது என்றால் யாராலும் நம்ப முடியாது. அந்த அளவுக்கு தன்னை இளமையாக வைத்துள்ளார். 
Editorial
Updated:- 2023-04-18, 21:10 IST

சின்ன தம்பி சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் நடிகை பாவ்னி. கூடிய விரைவில் தமிழ் மருமகளாகவும் மாறவுள்ளார். பிக் பாஸ் சீசன் 5ல் கலந்து கொண்ட போது இவருக்கும் அமீருக்கும் காதல் ஏற்பட்டது. அதனைத்தொடர்ந்து இருவரும் டேட் செய்தனர்.

இந்நிலையில் அமீரின் காதலை பாவ்னி ஏற்று கொண்டார். இருவரும் இணைந்து துணிவு படத்தில் நடித்தனர். கூடிய விரைவில் இருவரின் திருமணமும் அரங்கேறவுள்ளது. பாவ்னி, அமீரை விட வயதில் மூத்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் உண்மையில் இன்றும் பாவ்னி டீன் ஏஜ் பெண்களை போலவே அழகில் ஜொலிப்பார்.

இந்த பதிவும் உதவலாம்:உடல் எடையை கங்கனா எப்படி குறைத்தார் தெரியுமா?

அவரின் அழகு ரகசியம் மற்றும் அவர் பின்பற்றும் வொர்க்கவுட் டயட் பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

டயட்

பாவ்னி டயட்டை முறையாக கடைப்பிடிக்கிறார். தினமும் காலை உணவாக ஓட்ஸை அதிகம் எடுத்து கொள்கிறார். அதே போல் ஜூஸ், பழங்களை அதிகம் சேர்த்து கொள்கிறார். பாவ்னியின் உணவில் அரிசி உணவு கட்டாயம் இடம் பிடிக்கிறது. மதியம் நிறைய காய்கறிகளுடன் அரிசி உணவை எடுத்து கொள்கிறார்.

pavani reddy

ஜிம் மற்றும் யோகா

பாவ்னி, ஜிம் மற்றும் யோகாவில் அதிக கவனம் செலுத்துகிறார். மாலை நேரத்தில் ஜிம் வொர்க்கவுட் மற்றும் காலையில் யோகா பயிற்சியை மறக்காமல் செய்கிறார்.

pavani reddy amir

டான்ஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு பாவ்னி, நடனத்தில் அதிக கவனம் செலுத்த தொடங்கி விட்டார். டான்ஸை தனது ஃபிட்னஸூக்காகவும் பாவ்னி பின்பற்ற தொடங்கி விட்டார்.

இந்த பதிவும் உதவலாம்:கோலிவுட் பிரபலங்களின் பிரேக்கப் ஸ்டோரி

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com