herzindagi
image

சட்டென்று மாறும் வானிலை; பருவகால பாதிப்பிலிந்து உடலைப் பாதுகாத்துக் கொள்ள செய்ய வேண்டியது!

வானிலை மாற்றம் ஒருபுறம் மகிழ்ச்சியான மனநிலையைக் கொடுத்தாலும், பல உடல் நல பாதிப்புகளையும் இதனால் சந்திக்க நேரிடும்.
Editorial
Updated:- 2025-09-12, 18:21 IST

தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில தினங்களாக காலையில் வெயிலும் மாலை நேரங்களில் மழை என மாறி மாறி சுற்றுச்சூழல் மாறி வருகிறது. இப்படி பருவ காலங்கள் மாறும் போது நமது உடல் அதனை உடனடியாக ஏற்றுக்கொள்வதில்லை. சளி, இருமல், காய்ச்சல், தொண்டை கரகரப்பு, ஒவ்வாமை போன்ற பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதுப்போன்ற பாதிப்புகளைத் தடுக்கவும், புதிய சுற்றுச்சூழலால் ஏற்படும் சவால்களை நமது உடல் எதிர்கொள்ள என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த ஆரோக்கிய தகவல்கள் இங்கே.

மேலும் படிக்க: செரிமானம் முதல் சரும ஆரோக்கியம் வரை; காலையில் சியா விதை நீர் குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்

பருவகால பாதிப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

சமச்சீர் உணவு: எந்தவொரு பருவ காலத்தையும் எதிர்கொள்ள வேண்டும் என்றால், நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை எப்போதும் வலுவாக வைத்திருக்க வேண்டும். இதற்கு முதலில் நீங்கள் சமச்சீர் உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். வைட்டமின் சி, கால்சியம், வைட்டமின் டி, தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், பழங்கள், சிறுதானியங்கள் போன்றவற்றை உணவு முறையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடல் சுறுசுறுப்பு:

பருவ காலங்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தவிர்க்க நினைப்பவர்கள் உடலை எப்போதும் சுறுசுறுப்புடன் வைத்திருக்க வேண்டும். குளிர் அதிகம் உள்ளது என்பதற்காக வழக்கமாக செய்யக்கூடிய நடைபயிற்சி, சைக்கிளிங், யோகா போன்றவற்றைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு நீங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் மனநிலை மகிழ்ச்சி அடைவதோடு நாள் முழுவதும் உங்களை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க முடியும். உடலை எப்போதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க வேண்டும். இல்லையென்றால் மூட்டு வலி, தசைப்பிடிப்பு போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்தும்.

மேலும் படிக்க: இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும் வெந்தய தண்ணீர்; நோட் பண்ணுங்க மக்களே

தூக்கம் அவசியம்:

மொபைல் என்றைக்கு அனைவரது கைகளிலும் தவழ ஆரம்பித்ததோ? அன்றைய நாளிலிருந்து தூக்கம் என்பது தொலைந்துவிட்டது. சாதாரணமாக இரவு 12 அல்லது 2 மணிக்கு மேலாக தான் தூங்கச் செல்கிறார்கள். இவ்வாறு செய்வதால் உடலும் மனமும் சோ்ந்து சேர்வடைகிறது. பல நேரங்களில் சோர்வு, உடல் வலி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். எனவே குறைந்த பட்சம் இரவு நேரங்களில் 7 முதல் 8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும்.

நீரேற்றமாக இருத்தல்:

தற்போது மழை மற்றும் குளிர் நிலவிவருவதால் அதிக தண்ணீர் குடிக்க மாட்டோம். வெயில் காலங்களில் மட்டுமல்ல குளிர்காலங்களிலும் அதிக தண்ணீர் கொடுக்க வேண்டும். இல்லையென்றால் சூடு பிடித்தல், வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

Image credit - Freepik

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com