herzindagi
image

Idli Kadai Movie: கிராமத்து வாழ்க்கையை எடுத்துரைக்கும் இட்லி கடை; குடும்பத்தோடு பார்க்க வேண்டிய திரைப்படம் என விமர்சனம்!

தனுஷ் இயக்கி நடித்துள்ள இட்லி கடை திரைப்படம் இன்று வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்திரைப்படம் குறித்து சோசியல் மீடியாவின் வாயிலாக பல்வேறு கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
Editorial
Updated:- 2025-10-01, 12:51 IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் தனுஷ். எதார்த்தமான திரைப்படங்கள், ஆக்சன், காதல் என பல்வேறு கதைக்களத்தில் நடித்து ரசிகர்களைத் தன்வசப்படுத்தியுள்ளார் தனுஷ். நடிகராக மட்டுமல்ல இயக்குநராகவும் அவதரித்த தனுஷ் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படத்தை இயக்கியத்தைத் தொடர்ந்து இட்லி கடை திரைப்படத்தை இயக்கியும்,நடித்தும் உள்ளார். கிராமத்து வாழ்க்கை எப்படி இருக்கும்? என்பதை மிக எளிமையான பாணியில் எடுத்துரைக்கும் படமாக அமைந்துள்ளது இட்லி கடை. ஏற்கனவே அறிவித்துள்ள படி இப்படம் ஆயுத பூஜையான அக்டோபர் 1 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. திரையரங்கில் இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது சோசியல் மீடியாவின் வாயிலாக பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Jailer 2 movie: ஜெயிலர் 2 எப்போது ரிலீஸ்? அப்டேட் கொடுத்த ரஜினி - உற்சாகத்தில் ரசிகர்கள்

இட்லி கடை திரை விமர்சனம்:

டான் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார்ஃபிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இட்லி கடை படத்தை தனுஷ் இயக்கியுள்ளார். நாயகியாக நித்யா மேனன் மற்றும் அருண் விஜய், சத்யராஜ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

 

 

படம் பார்ப்பதற்கு மிகவும் அருமையாக இருக்கிறது, மற்ற படங்களைப் போல் இல்லாமல் எதார்த்தமாக படமாக அமைகிறது, மிகவும் எளிமையான படமாக இருக்கிறது, அனைத்து கதாபாத்திரத்திலும் நடிகர்கள் சிறப்பாக நடித்துள்ளார்கள் என இட்லி கடை படத்தைப் பார்த்த ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். இதோடு சோசியல் மீடியாவிலும் ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

 

 

 

மேலும் படிக்க: மீண்டும் பிச்சைக்காரன் ? ஜெயிலர் 2ல் சந்தானம், ரெட்ரோ ஓடிடி ரிலீஸ், மாமன் சூரி உருக்கம்

குறிப்பாக இட்லி கடை எமோஷனல் கதையாக இருப்பதாகவும், கதை தொடங்கிய முதல் 20 நிமிடங்களிலேயே தனுஷின் எமோசன் நடிப்பு சூப்பராக உள்ளது எனவும், கிராம வாழ்க்கையைப் பற்றி பேசும் படமாகவும் அமைந்துள்ளது என எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

 

 

கிராமத்து வாழ்க்கையும், நம்முடன் இருக்கும் பெற்றோர்களையும் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை எளிமையான நடையில் கூறியுள்ளதாக பயனர் ஒருவர் தன்னுடை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முதல் பாதி எமோசனல் இருந்தாலும், இரண்டாம் கதை கொஞ்சம் மெதுவாக நகர்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

வில்லன் கதாபாத்திரத்தில் அருண் விஜய் மிரட்டியுள்ளார் எனவும், இந்த பூஜை விடுமுறையில் குடும்பத்தோடு பார்க்க வேண்டிய நல்ல திரைப்படம் எனவும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களைத் தொடர்ச்சியாக பதிவிட்டுவருகின்றனர். நடிகர் தனுஷின் 52 வது திரைப்படம் வெற்றி தங்களுடைய வாழ்த்துக்கள் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

 

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com