காந்தாரா டீஸரில் இதை கவனித்தீர்களா ? துளு மொழியில் படத்தை வெளியிட வலியுறுத்தல்

துளு மொழி பேசும் மக்களின் குலதெய்வமான பஞ்சூர்லியை மையமாக வைத்து எடுக்கப்படும் காந்தாரா திரைப்படத்தை துளு மொழியில் வெளியிட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Main kan

காந்தாரா எனும் அற்புத படைப்பை உருவாக்கி குலதெய்வ வழிபாட்டுக்கு ஏன் ஒவ்வொரு மனிதனும் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை உணர்த்தியவர் ரிஷப் ஷெட்டி. படத்தின் மூலம் துளு மக்கள் வழிபடும் பஞ்சூர்லி குலதெய்வத்தை உலகறியச் செய்தார். அதில் இடம்பெற்றிருந்த வராஹ ரூபம் எனும் பாடல் அனைவரின் ரிங்டோனாகவும் மாறியது.

முதல் வாரத்தில் 30 கோடிக்கும் குறைவாகவே வசூலித்திருந்த காந்தாரா திரைப்படத்திற்கு அடுத்தடுத்த வாரங்களில் ரசிகர்கள் பெரும் வரவேற்பு கொடுத்தனர். ஒட்டுமொத்தமாக 350 கோடி முதல் 390 கோடி ரூபாய் வரை காந்தாரா வசூலித்தது. இதையடுத்து இரண்டாம் பாகத்திற்கான பணிகளைத் தொடங்கினார் ரிஷப் ஷெட்டி.

 kan

இந்த நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் பர்ஸ்ட் லுக்கிற்கான டீஸர் வெளியாகியுள்ளது. டீஸரில் கடம்பா ஆட்சி காலம் என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது. 340- 540 (பொது சகாப்தம்) ஆண்டுகளில் கர்நாடகாவின் தெற்கு பகுதியில் உள்ள கடற்கரை மாவட்டங்கள், உடுப்பி மற்றும் கேரளாவில் காசர்கோடு மாவட்டத்தைக் கடம்ப மன்னர்கள் ஆட்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இதை துளு நாடு என்றழைக்கின்றனர்.

மேலும் படிங்கஇந்தி மொழியா ? தமிழ் மொழியா ? நச்சுனு பதிலளித்த விஜய் சேதுபதி

இங்கு வாழும் மக்கள் தற்போதும் துளு மொழி பேசுகின்றனர். காந்தாரா படத்தில் வருவது போல துளு நாட்டின் பகுதிகளில் பூத கோலா ஆட்டம் பெயர் பெற்றது. அப்போது ஆண் காட்டுப்பன்றியை பொதுமக்கள் வணங்குவர். இம்மொழிக்கு எழுத்துரு வடிவம் இல்லையெனக் கூறப்பட்டது. ஆனால் 20ஆம் நூற்றாண்டில் கன்னட மொழியின் வரிவடிவத்தை ஒத்தி எழுத்துருவம் அமைக்கப்பட்டது.

 kan

சரி டீஸருக்கு வருவோம். ரிஷப் ஷெட்டியை காண்பிக்கும் முன்னர் ஒரு ஜாம்பவான் பிறந்துவிட்டதாக வாசகம் இடம்பெறுகிறது. அடுத்த காட்சியில் ரத்தம் சொட்ட சொட்ட இடது கையில் திரிசூலத்துடனும் வலது கையில் கோடாரியுடனும் ரிஷப் ஷெட்டி தோன்ற பின்னணியில் காந்தாராவின் தீம் மியூஸிக் இசைக்கப்படுகிறது.

1 நிமிடம் 22 விநாடிகள் ஓடும் இந்த டீஸர் கன்னடம், தெலுங்கு, மலையாளம், தமிழ், ஆங்கிலம் உட்பட ஏழு மொழிகளில் வெளியாகியுள்ளது. ஒரு கோடிக்கும் மேலானோர் இந்த டீஸரை பார்த்துள்ளனர். பெரும்பாலானோர் ரிஷப் ஷெட்டியை பாராட்டினாலும் சில கேள்விகளையும் முன்வைத்துள்ளனர். துளு நாட்டின் பகுதிகளில் நன்றாக ஆராய்ச்சி செய்து எங்களின் வாழ்வியலை திரைப்படமாக எடுத்துள்ளீர்கள், ஆனால் துளு மொழியில் டீஸரை வெளியிடாதது ஏன் எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் படிங்கஹாட் லுக்கில் நடிகை ரித்திகா சிங்

20 லட்சத்திற்கும் குறைவான மக்களே துளு மொழி பேசுவதால் வியாபாரத்தை மட்டுமே மனத்தில் வைத்து துளு மொழியில் வெளியிட மனம் வரவில்லையா என ரிஷப் ஷெட்டியை கேள்விகளால் துளைத்தெடுத்துள்ளனர். காந்தாரா படம் துளு மொழி பேசும் மக்களுக்குப் பெருமையைத் தேடி தந்தாலும் அவர்கள் விடுக்கும் கோரிக்கையும் நியாயமாகவே உள்ளது. எனவே காந்தாரா படத்தை துளு மொழியிலும் வெளியிட வேண்டும்.

 kan

படப்பிடிப்பு உடுப்பி மாவட்டத்திலும், இலங்கையிலும் நடைபெறும் என கன்னட சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. டீஸரில் நெகட்டிவாகத் தெரிந்த ஒரே விஷயம் பர்ஸ்ட் லுக்கில் ரிஷப் ஷெட்டியின் தோற்றம் அக்குவா மேன்-ஐ பிரதிபலிப்பது போல் இருந்தது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP