Durga Stalin Kitchen : அம்மி, மண்பானை சமையல் துர்கா ஸ்டாலின் வீட்டு கிச்சன் இவ்வளவு சிம்பிளா!

முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலினின் கிச்சன் டூர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த  நவீன காலத்திலும் மண்பானை சமையல், அம்மி என மிகவும் எளிமையான பழக்கத்தை கடைப்பிடிக்கிறார் துர்கா ஸ்டாலின். 

 
stalins wife durga

முதலமைச்சர் ஸ்டாலின் மனைவியான துர்கா ஸ்டாலின் ஆன்மீகத்தில் அதிக ஈடுப்பாடு கொண்டவர் என்பது அனைவரும் அறிந்தது. குடும்பத்திற்காக அவர் பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபடுவதை கண்டு வியக்காதவர்களே இல்லை. துர்கா ஸ்டாலினின் ஆன்மீக பயணத்திற்கு பலவகையான விமர்சனங்கள் எழுந்தாலும் அவரின் விருப்பத்திற்கு ஸ்டாலினும் அவரின் மகனும், அமைச்சருமான உதயநிதி முழு பலமாக நிற்கின்றனர். இதை துர்கா ஸ்டாலின் பல இடங்களில் பதிவு செய்து இருக்கிறார்.

இந்நிலையில் கடந்தாண்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஹோம் டூர் வீடியோ வெளியாகி இணையத்தில் படு வைரலானது. மூத்த செய்தியாளர் நடத்தும் யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியானது. வீட்டில் தனியாக இருக்கும் பூஜை அறை அதில் இருக்கும் கடவுள்களின் புகைப்படங்கள், சிலைகள், வழிபாடு ஆகியவற்றை ஒவ்வொன்றாக விளக்கி இருந்தார் துர்கா ஸ்டாலின். தனது விருப்பத்திற்கு ஏற்ப ஆன்மீக வழிப்பாட்டில் முதல்வர் ஸ்டாலின் கொடுத்திருக்கும் சுதந்திரத்தை பற்றியும் துர்கா இந்த வீடியோவில் அழுத்தமாக பதிவு செய்து இருந்தார்.

cm stalin wife

இந்நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் வீட்டில் இருக்கும் கிச்சன் டூர் வீடியோ தற்போது அதே யூடியூப் சேனலில் வெளியாகி ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. ஹாலில் இருக்கும் கிச்சனில் நவீன காலத்திற்கு ஏற்ப மாடலர் கிச்சன் செட்டப் செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் மகள் மற்றும் மருமகள் வீட்டில் சமைத்தால் அவர்களுக்கு வசதியாக இருக்க இந்த மாடலர் கிச்சன். ஆனால் துர்கா ஸ்டாலின் சமைப்பது, ஸ்டாலினுக்காக சமையல் நடக்கும் இடம் ரொம்ப ரொம்ப எளிமையானது.

இங்கு நடக்கும் சமையல் பெரும்பாலும் துர்கா ஸ்டாலின் செய்வது தானாம். மண்பானை சமையல், குக்கர் சாதம் இல்லாமல் அலுமினிய பாத்திரத்தில் சாதம் வடிப்பது, குழம்பு மிளகாய் தூள், பருப்பு பொடி என மிகவும் எளிதான சமையலை தான் அடிக்கடி செய்யவார்களாம். ஸ்டாலினுக்கு பிடித்த உணவு மண்பானையில் வைக்கப்படும் மீன் குழம்பு என்ற தகவலையும் துர்கா ஸ்டாலின் இந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

stalin family

அதுமட்டுமில்லை மருமகள் கிருத்திகா உதயநிதி செய்யும் பிரியாணியையும் ஸ்டாலின் விரும்பி சாப்பிடுவாராம். காலையில் டீ, வாரத்திற்கு ஒருமுறை கசாயம், பில்டர் காபி என முறையாக கடைப்பிடிக்கின்றனர். திருமணத்திற்கு பின்பு மாமியாரும் கலைஞரின் மனைவியுமான தயாளு அம்மாவிடமிருந்து தான் சமையல் கற்றுக் கொண்டதாகவும் துர்கா ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். அதே போல் கலைஞருடன் கோபாலபுரத்தில் இருந்த சமையத்தில் துர்கா ஸ்டாலின் தான் சமையலை கவனித்து கொண்டாராம். மீன் குழம்பு, உருண்டை குழம்பு, மட்டன் கீமா குழம்பு போன்றவற்றை கலைஞர் விரும்பி சாப்பிடுவார் என்றும் துர்கா ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

துர்கா ஸ்டாலினின் இந்த சிம்பிள் கிச்சன் வீடியோ இணையத்தில் பலரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

இந்த பதிவும் உதவலாம்:தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்.. பேட்டியில் பகீர் கிளப்பிய நடிகை குஷ்பு

இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP