தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானேன்.. பேட்டியில் பகீர் கிளப்பிய நடிகை குஷ்பு

நடிகையும் அரசியல் பிரமுகருமான குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கசப்பான தகவலை பகிர்ந்துள்ளார். குஷ்புவின் இந்த பேட்டி வைரலாகி வருகிறது. 

actress kushboo insta
actress kushboo insta

80ஸ் டூ 90ஸ் வரை தமிழ் சினிமாவில் தனி ஆட்சி செய்தவர் நடிகை குஷ்பு. முதன்முதலாக நடிகைக்கு கோயில் கட்டப்பட்டது என்றால் அது குஷ்புக்கு தான். அவரின் அழகு, சிரிப்பு, நடனம், நடிப்பு என தமிழ் ரசிகர்கள் குஷ்புவின் பக்தர்களாகினர். ஒரே நேரத்தில் ரஜினி, கமல், பிரபு, சரத் குமார் என சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார். இவர் நடித்த படங்கள் அனைத்தும் வெற்றி விழா கொண்டாடினர். பீக்கில் இருந்த சமயத்திலே இயக்குனர் சுந்தர்.சியை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்தார், தற்போதும் நடித்து வருகிறார்.

வெள்ளத்திரையில் மட்டுமில்லை சின்னத்திரையிலும் குஷ்பு வெற்றி தடத்தை பதித்தார். இயக்குனராகவும் அவதாரம் எடுத்தார். தயாரிப்பாளராகவும் கலக்கி வருகிறார். இதை எல்லாம் தாண்டி தற்போது அரசியலிலும் தனது பங்களிப்பை தந்து வருகிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியவர் தற்போது பாஜகாவில் இணைந்தார். பாஜகாவில் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். சினிமா, அரசியல், குடும்பம், சமூக சேவை என மல்டி டாஸ்க் செய்து வரும் குஷ்பு , எப்போதுமே மிகவும் தைரியமாக கருத்துக்களை முன் வைக்ககூடியவர்.

சமூவலைத்தளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருக்க கூடியவர். சமீபத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் குறித்து ’மீரா’ சீரியல் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்தார். இந்நிலையில் குஷ்பு தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதற்கு அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்தன. இதையடுத்து சில தினங்களுக்கு முன்பு டெல்லி சென்று ஆணையத்தில் உறுப்பினராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிலையில் டெல்லியில் வி தி வுமன் நிகழ்ச்சியில் மோஜோ ஸ்டோரிக்காக பேட்டி அளித்திருக்கும் குஷ்பு தனது வாழ்வில் நடந்த கசப்பான பயணத்தை பற்றி பகிர்ந்துள்ளார்.

kushboo sundar

அதாவது, 8 வயதில் இருந்து தனது தந்தையால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக குஷ்பு தெரிவித்துள்ளார். 8 வயது முதல் 15 வயது அது தொடர்ந்தாகவும், தனது அம்மா ஒரு மோசமான நபரை திருமணம் செய்து கொண்டு அடி, உதை, வேதனையை எதிர்கொண்டதாக கூறியுள்ளார். 15 வயது வரை இதை வெளியில் சொல்ல முடியாமல் போராடியவர், தனது 16 வயது வயதில் தனது தந்தையை எதிர்க்க தொடங்கியுள்ளார். இதை பற்றி அம்மாவிடன் கூறினால் அவர் நம்புவாரா மாட்டாரா? என்ற பயம் தனக்கு இருந்ததாகவும் குஷ்பு தெரிவித்துள்ளார். பின்பு குஷ்புவின் அப்பா, குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றாராம்.

இந்த பதிவும் உதவலாம்:நடிகை சமந்தா மயோசிடிஸிலுருந்து மீண்டது எப்படி?

”ஒரு குழந்தை, சிறு வயதிலே பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் அந்த வடு அந்த குழந்தையின் மனதில் ஆறாத ரணமாய் இருக்கும்”. எனவும் மிகவும் உருக்கமாக இந்த தகவலை குஷ்பு பகிர்ந்துள்ளார். குஷ்புவின் இந்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Images Credit: google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP