பெண்களுக்கு குட் நியூஸ்; மானியத்தில் மாவு அரைக்கும் இயந்திரம் - தமிழக அரசு

பொருளாதார ரீதியாக பெண்கள் தங்களது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மானிய விலையில் மாவு அரைக்கும் இயந்திரத்தை தமிழக அரசு வழங்கி வருகிறது.
image
image

தமிழக அரசின் சமூக நலத்துறையின் சார்பில், பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாநில அரசு வழங்கி வருகிறது. பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் விதமாக வங்கிகளில் கடன் பெற்று தருதல், மானிய விலையில் பெண்கள் செய்யக்கூடிய தொழிலுக்கு ஏற்றவாறு இயந்திரம் வழங்குதல், மகளிர் குழுக்களுக்கு கடன் மற்றும் பஸ் பாஸ் வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களைத் தொடர்ச்சியாக தமிழக அரசு செய்து வருகிறது. இந்த வரிசையில் தற்போது 50 சதவீத மானியத்தில் வணிக ரீதியான மாவு அரைக்கும் இயந்திரம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கு தகுதியுடைய பெண்கள் யார்? என்னவெல்லாம் சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறித்த முழு விபரங்கள் இங்கே.

பெண்களுக்கு மானிய விலையில் மாவு அரைக்கும் இயந்திரம்:

சமூக நலத்துறையின் சார்பில் சமூகத்தில் பின்தங்கிய பிரிவினராக கைம் பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் தங்களது குடும்பத்தையும், குழந்தைகளையும் எவ்வித இடையூறும் இன்றி வளர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன் படி வீட்டில் இருந்தே சுய தொழில் செய்வதற்கு ஏதுவாக மானிய விலையில் மாவு அரைக்கும் இயந்திரத்தை வழங்க திட்டமிட்டுள்ளது.

தகுதியுடையவர்கள் யார்?

  • மானிய விலையில் மாவு அரைக்கும் இயந்திரத்தைப் பெற விரும்பும் பெண்கள் தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவர்கள் என்பதற்கான இருப்பிட சான்றிதழ் கட்டாயம் தேவை.
  • விண்ணப்பிக்கும் பெண்களுக்கு 25 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அதற்கான சான்றிதழ் கட்டாயம் தேவை.
  • விண்ணப்பிக்கும் முன்னதாக கைம் பெண்கள், ஆதரவற்ற பெண்கள் தான் வட்டாசியரிடம் தகுதி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மானிய விலையில் மாவு இயந்திரம் வாங்க விண்ணப்பிக்கும் பெண்களுக்கு ஆண்டு வருமானம் 1 லட்சத்தி 20 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும்.

மேலும் படிக்க:மாதம் ரூ 20 ஆயிரம் சம்பாதிக்க பெண்களுக்கு அழகுக்கலை பயிற்சி அளிக்கும் அரசு

விண்ணப்பிக்கும் முறை:

  • மேற்கூறியுள்ள தகுதிகள் இருக்கும் பெண்கள் இதற்குரிய விண்ணப்பத்தை https://www.tnsocialwelfare.tn.gov.in/en அல்லது https://thoothukudi.nic.in/notice/applying-for-subsidy-to-purchase-dry-and-commercial-wet-flour-grinding-machines-for-women-to-improve-their-livelihoods/ இணையதளப்பக்கத்தின் வாயிலாக பெற்றுக்கொள்ளலாம்.
  • இதில் உள்ள விண்ணப்ப படிவத்தைப் பூர்த்தி செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இல்லையெனில் அஞ்சல் வாயிலாகவும் அனுப்பி வைக்கலாம்.
  • தகுதியுடைய பெண்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவர்களுக்கு ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள அல்லது அதகு மேற்பட்ட மதிப்புடன் கூட உலர் மற்றும் மாவு அரைக்கும் இயந்திரமானது 50 சதவீத மானியத்தில் கிடைக்கும்.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP