உயிர்கொல்லி நோயாக பார்க்கப்படும் புற்றுநோய் மிக மிக கொடியது. ஒருவருக்கு பல்வேறு காரணங்களால் புற்றுநோய் ஏற்படுவதாக கூறப்படுகிறது. வாழ்க்கை மாற்றம் தொடங்கி மரபியல் காரணம், பழக்கவழக்கங்கள், மது, போதைப்பொருட்கள், உணவுமுறை என இப்படி பல காரணங்களால் புற்றுநோய் பிரச்சனை ஏற்படுகிறது. அதிலும் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவை அதிக வலியும் வேதனையும் தரக்கூடியது.
இதிலிருந்து மீண்டு வர வெறும் சிகிச்சை மட்டும் போதாது, மன தைரியமும் நம்பிக்கையும் அவசியம். அந்த வகையில் மனதில் உறுதி கொண்டு, கேன்சரை போராடி வென்று வந்த நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
இந்த பதிவும் உதவலாம்:கதையின் நாயகி.. ஐஸ்வர்யா ராஜேஷின் வெற்றி பயணம்!
கெளதமி
நடிகை கவுதமி ’லைஃப் வின்னர்’ என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வருகிறார். அதற்கு காரணம், தனது 35 வயதில் கெளதமி மார்பக புற்றுநோய் பிரச்சனையால் அவதிப்பட்டார். இப்போது அதிலிருந்து முழுமையாக குணமடைந்து பல பெண்களுக்கும் முன்னுதாரணமாக வாழ்த்து வருகிறார். மனதில் உறுதி இருந்தால் பெண்கள் எதிலும் ஜெயிக்கலாம் என்கிறார் கெளதமி.
மனிஷா கொய்ராலா
பாபா, இந்தியன், முதல்வன், பம்பாய் போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மனதை கொள்ளையடித்த மனிஷா கொய்ராலா சில ஆண்டுகளுக்கு முன்பு கருப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்பு அதற்கு தீவிர சிகிச்சை எடுத்து கொண்டு கேன்சருடன் போராடி இன்று பூரணமாக குணமாகி விட்டார்.
சோனாலி பிந்த்ரே
பாலிவுட்டில் டாப் நடிகையாக வலம் வந்த சோனாலி பிந்த்ரே தமிழில் காதலர் தினம் படத்தில் நடித்து இருக்கிறார். இன்றும் இந்த படத்தில் இவர் நடித்த ரோஜா கதாபாத்திரத்தை ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு சோனாலி பிந்த்ரே புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது எடுத்து கொண்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருந்தார். இதுப்போன்ற நேரத்தில் நம்பிக்கையுடன் போராட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இப்போது அதிலிருந்து குணமாகி நலமுடன் இருக்கிறார்.
மம்தா மோகன் தாஸ்
தமிழில் சிவப்பதிகாரம் படம் மூலம் அறிமுகமான மம்தா மலையாளத்தில் முன்னணி நடிகை. அதுமட்டுமில்லை தமிழ் மற்றும் தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்து இருக்கிறார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு மம்தா, புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். இதற்காக தீவிர சிகிச்சை எடுத்து கொண்டவர் தற்போது அதிலிருந்து குணமடைந்தார். ஆனாலும் நிறமிழப்பு பிரச்சனையால் தற்போது அவதிப்பட்டு வருகிறார். நம்பிக்கையுடன் வாழ்வின் ஒவ்வொரு நாளையும் போராடி கடக்கிறார் மம்தா மோகன் தாஸ்.
இந்த பதிவும் உதவலாம்:நடிகை சமந்தா மயோசிடிஸிலுருந்து மீண்டது எப்படி?
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation