நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘யசோதா’. இதன் டிரைலர் இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சமந்தா சண்டை காட்சிகளில் பட்டையை கிளப்பி இருக்கிறார் என அவருடைய ரசிகர்கள் புகழாரம் சூட்டி வரும் வேளையில் தான், சமந்தா அவர்களுக்கு ஒரு அரிய வகை நோய் இருப்பது தெரியவந்துள்ளது.
நடிகை சமந்தா அவர்கள் யசோதா படப்பிடிப்பின் டப்பிங்கில் இருக்கும் ஒரு போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போட்டோவில் அவருடைய முகம் தென்படவில்லை. பின்னிருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில், அவர் டிரிப்ஸ் ஏற்றிக்கொண்டே டப்பிங் செய்வதை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர்.
அவர், “யசோதா டிரைலருக்கு நீங்கள் அளித்த வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுடைய அன்பும், ஆதரவும் தான் நான் வாழ்க்கையில் சந்திக்கும் பல சவால்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு மயோசிடிஸ் எனும் தன்னுடல் தாக்குமை நோய் இருப்பது எனக்கு கண்டறியப்பட்டது. நான் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியதும் இதனை கூறலாம் என நினைத்திருந்தேன். ஆனால், குணமடைய நான் எதிர்பார்த்ததை விட நீண்ட நாட்களாகும் என தெரிகிறது. இதனால் நான் பாதிக்கப்பட்டிருப்பதை நிச்சயம் மனதளவில் உணர்ந்து ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். நான் விரைவில் குணமடைந்துவிடுவேன் என்பதை மருத்துவர்கள் நம்புகிறார்கள். என் வாழ்வில் சிறந்த நாட்கள் இருப்பதை போலவே, மோசமான நாட்களும் உள்ளது தான். இதனை உடல் அளவிலும், மனதளவிலும் நான் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும். நான் விரைவில் பூரணமாக குணமடைந்து வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கிறேன். ஐ லவ் யூ! இதுவும் கடந்து போகும்” என்று பதிவிட்டுள்ளார்.
‘யசோதா’ திரைப்படம் பல மொழிகளில் ரிலீசாகிறது. இந்தியில் நவம்பர் 11 ஆம் தேதி இத்திரைப்படம் திரைக்கு வரவிருக்கிறது.
மயோசிடிஸ் என்பது அவ்வுடலின் அணுக்களையே தாக்கி அழிக்கும் நிலையாகும். சமந்தா பாதிக்கப்பட்டிருக்கும் இந்த நோய் குறித்து நாம் தெரிந்துக்கொள்ள வேண்டியவை.
மயோசிடிஸ் என்பது தசைகளில் நோய் ஏற்படும் நிலையாகும். ‘மயோ’ என்பது தசையை குறிக்கிறது. இது வைரஸ் தொற்றுக்கள், மருந்துகள் மற்றும் தன்னுடல் தாக்க நிலை உள்ளிட்ட காரணங்களால் வரலாம் என, உள்ளக மருத்துவத் துறை போர்டிஸ் மருத்துவமனை இயக்குனரான டாக்டர் சுதா மேனன் அவர்கள் கூறுகிறார்.
“மருத்துவ பரிசோதனைக்கு பிறகே இதனை கண்டறிய முடியும். இரத்த பரிசோதனை, MR இயல்நிலை வரைவு, EMG மற்றும் தசை உடல் திசு ஆய்வுக்கு பிறகே இதனை குறித்து முடிவு செய்ய முடியும். இந்த நோய்களுக்கு ஸ்ட்டீராய்டு மற்றும் நோய் எதிர்ப்பு தடுப்பு மருந்துகளை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.” என டாக்டர் அகர்வால் கூறுகிறார்.
“இது வைரஸ் தொற்றினால் வந்திருந்தால், இதனை தன்னடக்க நோயாகவே பார்க்க முடியும். ஒருவேளை, இது மருந்துகளால் வந்திருந்தால், அந்த மருந்து எடுத்துக்கொள்வதை நிறுத்தும்போது குணமடைய வாய்ப்புள்ளது. ஆனால், இதற்கு பொதுவான காரணம் தன்னுடல் தாக்குமை தான். இதனால் தசை செல்கள் தாக்கப்பட்டு நோய் உண்டாகும். இதன் காரணமாக தசைகளில் வலி, பலவீனம் மற்றும் எரிச்சல் உண்டாகலாம்.” என்கிறார் டாக்டர் மேனன் அவர்கள்.
இது போன்ற பல தலைப்புகள் குறித்து உடனுக்குடன் அறிய ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைந்திருங்கள்.
Image Credit: Google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com