உடல் எடை அதிகரிப்பு தான் இப்போது பெரும்பாலான பெண்களுக்கு இருக்கும் பிரச்சனையாகும். பல பெண்கள் ஆபத்தையும் பின்விளைவுகளையும் உணராமல், தவறான முறைகளில் எடை குறைக்க முயற்சி செய்கின்றனர்.
பேலியோ டயட்டால் பிரபல சின்னத்திரை நடிகர் பரத் கல்யாணின் மனைவி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சர்க்கரை நோயாளியான அவரது மனைவி பேலியோ டயட் பின்பற்றி வந்தார். இதனால் அவரது சர்க்கரை நோய் அதிகமாகி, உடல்நிலை மோசமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த சில மாதங்களாக கோமாவில் இருந்த அவர், நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார்.
பழம்பெரும் நடிகர் கல்யாண் குமாரின் மகனான பரத் கல்யாண், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமானவர். தற்போது, இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வருகிறார். அதேபோல ஹாட்ஸ்டார் OTT-யில் ஒளிபரப்பாகி வரும் கனா காணும் காலங்கள் 2 வெப் சீரியஸிலும் நடித்துள்ளார். இவருக்கு ப்ரியா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் இருந்த நிலையில் அவரது மனைவி நேற்று உயிரிழந்தார்.
இதற்கு பேலியோ டயட் தான் காரணம் என தகவல் வெளிவந்துள்ளது.
பேலியோ டயட் என்பது காய்கறிகள், கொட்டை வகைகள், இறைச்சி ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவதாகும். இதில் பால், தயிர், பனீர் போன்ற பால் சார்ந்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், தானியங்கள், பருப்பு வகைகள், சர்க்கரை, உப்பு, காபி, போன்ற உணவுகள் எதுவும் இடம்பெறாது. பேலியோ டயட்டில் கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. பேலியோ டயட்டை கற்கால டயட் என்றும் கூறுவார்கள். ஏனெனில் இதனில் அரிசி, கோதுமை போன்ற எல்லா தானியங்களையும் தவிர்த்துவிட்டு, ஆதிகால மனிதனை போல இறைச்சி, முட்டை, மீன், காய்கறிகளை மட்டுமே சாப்பிட வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.
இந்த டயட்டில் கார்போஹைட்ரேட் முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. புரதம், ஊட்டச்சத்துக்கள் மட்டும் நம் உடலுக்கு போதாது. கார்போஹைட்ரேட் , கொழுப்பு உட்பட எல்லாமே தேவைப்படுகிறது. அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் எடுத்துக்கொள்ள கூடாது என்பது உண்மையே. அப்படி எடுத்துக்கொண்டால் தான் உடல் எடை அதிகரிக்கும். ஆனால், அதனை முற்றிலும் தவிர்ப்பது நல்லதல்ல.
பேலியோ டயட்டில் கார்போஹைட்ரேட் முற்றிலும் தவிர்க்கப்படுவதால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் பேலியோ டயட்டை பின்பற்றுவோர் மிக சோர்வாக உணர்வார்கள். அதேபோல கல்லீரலுக்கும் தசைகளுக்கும் ஆற்றலைக் கொடுக்கும் கிளைக்கோஜன் உற்பத்தியும் குறைகிறது.
இந்த பேலியோ டயட்டை மருத்துவர் ஆலோசனைக்கு பிறகே பின்பற்ற வேண்டும்.
நம் உடல் நிலை பற்றி அறியாமல், தன்னிச்சையாக பேலியோ டயட்டை பின்பற்றுவது ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்த டயட்டை பின்பற்றும் போது உடல் எடை குறைகிறதா என்பதில் மட்டுமே கவனம் செலுத்தாமல், உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் தொடர்ந்து கவனிக்க வேண்டும். ஏதேனும் பெரிய வித்தியாசம் தெரிந்தால், மருத்துவரை அணுகவும்.
இந்த தகவல் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாக இருந்திருக்குமென நம்புகிறோம். இந்த பதிவு பிறருக்கும் பயன்பெற இதனை பகிரலாமே. மேலும் லைக் செய்யவும், பதிவு குறித்த உங்கள் கருத்தினை கமெண்ட் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.
Images Credit: freepik, google
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com