Actress sadha : இந்த காரணத்தினால் தான் திருமணம் செய்துக்கொள்ளவில்லை - நடிகை சதா

நடிகை சதா திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் குறித்து கூறியுள்ளார்.

 
sadaa in green lehenga clicks
sadaa in green lehenga clicks

நடிகை சதா 2000 த்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழில் ஜெயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி ரசிகர்களை பெற்றார்.நடிகர் அஜித்துடன் இணைந்து 2006 ஆம் ஆண்டு வெளியான திருப்பதி என்ற படத்தில் நடித்தார்.நடிகர் வினை நடிப்பில் வெளியான உன்னாலே உன்னாலே படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்கு இன்றும் ரசிகர்கள் உள்ளனர்.நடிகை சதா 2018 ஆம் ஆண்டு தமிழில் வெளியான டார்ச் லைட் என்ற படத்தில் நடித்திருந்தார். அதன் பின்பு தமிழில் எந்த படமும் நடிக்கவில்லை.டான்ஸ் நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் சதா நடுவராக இருந்துள்ளார்.தற்போது ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கிறார்.

இந்நிலையில் 39 வயதாகும் சதா திருமணம் செய்து கொள்ளாததற்கு காரணம் என்னவென்று வெளிப்படையாக கூறியுள்ளார். நான் எங்கு சென்றாலும் திருமணம் குறித்த கேள்வியே கேட்கின்றனர். எனக்கு திருமணம் செய்துக்கொள்ள எண்ணமில்லை.இப்போது எனக்கு பிடித்த வேலையை செய்கிறேன். சந்தோஷமாக இருக்கிறேன். திருமணம் செய்துக்கொண்டால் இதெல்லாம் இருக்குமோ இருக்காதோ என தெரியவில்லை.

sadaa latest clicks

இந்த காலத்தில் பிரம்மாண்டமான திருமணங்களை செய்துக்கொண்டு சில நாட்களிலேயே பிரிந்து விடுகின்றனர்.இப்படி திருமணம் செய்துக்கொண்டு பிரிவதற்கு, திருமணம் செய்து கொள்ளமலேயே இருப்பது நல்லது’ என சதா பேசியிருக்கிறார்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP