Tamil Actress : தேசிய விருது பெற்ற தமிழ் நடிகைகள் யார் யார் தெரியுமா?

தேசிய விருது பெற்ற தமிழ் நடிகைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்..

 
tamil actress who won national award list  here
tamil actress who won national award list  here

நடிகை லட்சுமி

1976 ஆம் ஆண்டு வெளியான ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’படம் வெளியானது. இந்த திரைப்படம் ஜெயகாந்தனின் புத்தகத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இந்த திரைப்படத்தில் நடித்த நடிகை லட்சுமி சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இவரே தேசிய விருது பெற்ற முதல் தமிழ் நடிகை என்ற பெருமையையும் பெற்றார்.

நடிகை சுஹாசினி

சிந்து பைரவி திரைப்படம் 1985 ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தில் நடித்த சுஹாசினி மணிரத்னம் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். மேலும் இந்த படம் சிறந்த இசைக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளது.

tamil actress south indian cinema ()

நடிகை பிரியாமணி

நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான பருத்திவீரன் படத்தில் நடிகை பிரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார்.

நடிகை அபர்ணா பாலமுரளி

சுதா கொங்காரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தில் பொம்மி என்ற கதாபாத்திரத்தில் அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பெற்றார். இந்த படம் 5 தேசிய விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP