Charcoal Soap: கரித்தூள் சோப் முகத்தை இந்தளவிற்குப் பொலிவாக்குமா?

பெண்களின் முகத்தை எப்போதும் பொலிவுடன் வைத்திருக்க சமீப காலங்களாக டிரெண்டிங்கில் உள்ளது கரித்தூள் சோப் எனப்படும் சார்கோல் சோப்
image
image

40 வயதிலும் இளமை மாறாமல் முகத்தைப் பொலிவுடன் வைத்திருக்க வேண்டும் என்ற நினைப்பில் உள்ள பெண்கள் இதற்காக பல மெனக்கெடுவார்கள். அழகு நிலையங்களுக்குச் செல்வது முதல் சந்தைகளில் விற்பனையாகும் விலையுயர்ந்த அழகு சாதன பொருள்களையெல்லாம் வாங்கிப் பயன்படுத்துவார்கள். இதையெல்லாம் தொடர்ச்சியாக செய்ய முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது.இதற்கு வேறொன்றும் செய்ய தேவையில்லை. தினமும் நாம் பயன்படுத்தக்கூடிய சோப்புகளை மாற்றலாம். இதற்கு சிறந்த தேர்வாக உள்ளது கரித்தூள் சோப் எனப்படும் சார்கோல் சோப். இவை எப்படி முகத்தைப் பொலிவாக்குகிறது? இதனால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

  • கரித்தூள் சோப் எனப்படும் சார்கோல் சருமத்திற்கு பல வகைகளில் உதவியாக உள்ளது.குறிப்பாக எண்ணெய் பிசுபிசு சருமம் கொண்ட பெண்கள் தொடர்ச்சியாக கரித்தூள் சோப்பைப் பயன்படுத்தும் போது, முகத்தில் படிந்திருக்கும் அதிகப்படியான எண்ணெய்களை உறிஞ்சுவதோடு எப்போதும் புத்துணர்ச்சியான பொலிவைத் தருவதற்கு உதவியாக உள்ளது.
  • அழகு சாதன பொருள்களால் ஏற்படக்கூடிய ஒவ்வாமையால் தோல் அரிப்பு ஏற்படுவது இயல்பானது. இதற்கு சிறந்த தேர்வாக உள்ளது கரித்தூள் சோப். தொடர்ச்சியாக இதை உபயோகிக்கும் போது, தோல் சம்பந்தப்பட்ட எந்த பிரச்சனைகளும் ஏற்பட வாய்ப்பில்லை.
  • முகத்தில் அழுக்குகள் மற்றும் மாசுக்கள் அதிகம் படியும் போது முகப்பருக்கள், கருந்திட்டுகள் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இவற்றை சரிசெய்வதற்கு கரித்தூள் சோப்பைப் பயன்படுத்தலாம்.
  • கரித்தூள் சோப்பைத் தொடர்ச்சியாக பயன்படுத்தும் போது, சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி புதுப்பொலிவைத் தருகிறது.

கரித்தூள் சோப் தயாரிக்கும் முறை:

சருமத்திற்கு பல வகைகளில் நன்மை பயக்கும் சார்கோல் அல்லது கரித்தூள் சோப் அனைத்துக் கடைகளிலும் விற்பனையாகிறது. இன்னும் ஆரோக்கியமான முறையில் இந்த சோப்பை வீட்டிலேயே நீங்கள் தயாரிக்க முடியும்.

மேலும் படிக்க:கழுத்து கருப்பாகி உங்களது அழகைக் கெடுக்கிறதா? சட்டென்று மறைய இதைப் பின்பற்றுங்கள்

தேவையான பொருட்கள்:

  • கரித்தூள் - சிறிதளவு
  • தண்ணீர் - அரை கப்
  • கிளிசரின் - 1 டீஸ்பூன்
  • தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
  • கற்றாழை ஜெல் - சிறிதளவு
  • கிளிசரின் சோப்பு கட்டி



செய்முறை:

  • கரித்தூள் சோப் தயார் செய்வதற்கு முதலில், கிளிசரின் சோப் கட்டிகளை சிறு துருவலாக சீவிக் கொள்ள வேண்டும்.
  • பின்னர் இதை தண்ணீரில் நன்கு கலக்கிய பின்னதாக கரித்தூள் சேர்த்து நன்றாக கிளறி வைத்துக் கொள்ளவும்.
  • இதையடுத்து கிளிசரின், தேங்காய் எண்ணெய், எசன்ஷியல் எண்ணெய் மற்றும் கற்றாழை ஜெல் சேர்த்து லேசாக சூடாக்க வேண்டும். 5 நிமிடங்களுக்குப் பிறகு கரித்தூள் கலவையை சேர்த்துக் கொள்ளவும். நீங்கள் தயாரிக்கும் சோப்பிற்கு நறுமணம் தேவையெனில் பிடித்த வாசனை எண்ணெய்யை சேர்க்கவும்.

மேலும் படிக்க:முகத்தைப் பொலிவாக்கும் அரிசி தண்ணீர்; ஒருமுறையாவது இப்படி பயன்படுத்திப் பாருங்கள்!

  • இவற்றை சோப் மோல்டில் ஊற்றி கட்டியானதும் எடுத்தால் போதும். சருமத்திற்கு பல வகைகளில் நன்மைத் தரக்கூடிய கரித்தூள் சோப் ரெடி.

Image credit - Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP