Benefits of kalonji: கல்லீரலை பாதுகாக்கும் - நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும்; கருஞ்சீரகத்தால் ஏற்படும் 5 முக்கிய நன்மைகள்

Benefits of kalonji: கல்லீரலை பாதுகாப்பதில் தொடங்கி  நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவது வரை கருஞ்சீரகத்தில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கி இருக்கின்றன. அவற்றில் முக்கியமான ஐந்து நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
image
image

Benefits of kalonji: இந்திய உணவுகளில் பயன்படுத்தப்படும் கருஞ்சீரகத்திற்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இவை உணவுக்கு ஒரு தனித்துவமான சுவையையும், மணத்தையும் கொடுக்கின்றன. எகிப்தியர்களால் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த கருஞ்சீரகம், ஆயுர்வேத மருத்துவத்தில் நீண்ட காலமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், இதில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள், புரதங்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன.

உங்களுடைய அன்றாட உணவில் சிறிய அளவு கருஞ்சீரகத்தை சேர்த்துக்கொள்வது, பல உடல்நல பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு உதவும். இந்த சிறிய கருப்பு விதைகள் ஆரோக்கியத்திற்கு ஏன் மிகவும் நல்லது என்பதற்கான காரணங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

1. அழற்சியை குறைக்க உதவும்:

இந்த கருஞ்சீரகத்தில், தைமோகுவினோன் (Thymoquinone) என்ற ஒரு கலவை உள்ளது. இது நாள்பட்ட அழற்சியை குறைக்க உதவுகிறது. இந்த அழற்சி பெரும்பாலும் ஒரு கடுமையான உடல்நல கோளாறுக்கு வழிவகுக்கும். இந்த விதைகளை மிதமான அளவில் தினசரி உட்கொள்வது உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க உதவும்.

uses of nigella seeds

2. கல்லீரலை பாதுகாக்க உதவும்:

நமது கல்லீரல், உடலில் உள்ள ஒரு முக்கிய உறுப்பு ஆகும். இது நச்சுகளை அகற்றுவது, மருந்துகளை வளர்சிதை மாற்றம் செய்வது மற்றும் ஊட்டச்சத்துகளை செயலாக்குவது போன்ற பல்வேறு முக்கியமான செயல்பாடுகளை செய்கிறது. கல்லீரலை காயம் அல்லது எந்த விதமான சேதத்திலிருந்தும் பாதுகாக்கக் கூடிய ஆற்றல் கருஞ்சீரகத்தில் உள்ளது. மேலும், அதன் செயல்திறனை மேம்படுத்துகிறது.

3. நீரிழிவு நோயை தடுக்கும் ஆற்றல்:

இந்த சிறிய விதைகள் இரத்தத்தில் சர்க்கரை அளவின் திடீர் அதிகரிப்பை தடுக்கின்றன. மேலும், நீரிழிவு நோயின் பிற அறிகுறிகளையும் குறைக்கின்றன. கருஞ்சீரகத்தை தொடர்ந்து எடுத்துக்கொள்வது உங்களுடைய கொழுப்பின் அளவையும் குறைக்க உதவும். நீங்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், ஒவ்வொரு காலையும் வெறும் வயிற்றில் கருஞ்சீரகம் கலந்த தண்ணீரைக் குடிக்கலாம்.

மேலும் படிக்க: சருமத்தை பொலிவாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இந்த ஆயுர்வேத ஃபேஸ்பேக்கை ட்ரை பண்ணுங்க

4. முகப்பருக்களை போக்க உதவும்:

கருஞ்சீரக எண்ணெய் உங்களுடைய சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். குளிர் மற்றும் கடுமையான காற்று உங்களுடைய சருமத்தை வறண்டு போகச் செய்து மந்தமாக மாற்றும்போது, கருஞ்சீரக எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களை அகற்ற, இதனை தினமும் இரண்டு முறை முகத்தில் தடவலாம்.

Benefits of nigella seeds

5. புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பண்புகள்:

கருஞ்சீரகத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கவும், புற்றுநோயை உண்டாக்கும் செல்களுக்கு எதிராக போராடவும் உதவும். இது கணைய, நுரையீரல், கருப்பை வாய், புரோஸ்டேட், தோல் மற்றும் பெருங்குடல் புற்றுநோய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ளதாக இருக்கிறது.

இவ்வளவு மருத்துவ குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை சரியான முறையில் பயன்படுத்துவதன் மூலம் பல்வேறு நன்மைகளை நாம் பெற முடியும்.

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

Image Credit: Freepik

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP