ஸ்ரீதேவி -போனி கபூரின் மூத்த மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் 2018 ஆம் ஆண்டு தடக் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதையடுத்து குஞ்சன் சக்சேன என்ற பயோபிக் படத்தில் நடித்து பாராட்டுக்களை பெற்றது. 2021 ஆம் ஆண்டு வெளியான ரூஹி என்ற ஹாரர் திரைப்படம் ரசிகர்களுக்கு பிடித்த ஹாரர் படமாக அமைந்தது.
அதையடுத்து கோலாமாவு கோகிலா படத்தின் ரீமேக்கான குட் லக் ஜெர்ரி படத்திலும், மலையாள படமான ஹெலன் படத்தின் ரீமேக்கன் ‘மில்லி’ என்ற படத்திலும் நடித்தார். தற்போது என்.டி.ஆரின் 30 வது படமான தேவரா படத்தில் ஜான்வி கபூர் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார்.மேலும் தமிழில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகை ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியானது.அது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஆபாச தளங்களில் தனது புகைப்படம் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தேன் என ஜான்வி கபூர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் ‘பிரபலத்தின் வீட்டு குழந்தையாக வளர்வது மிகவும் கஷ்டம். சிறுவயதில் எனது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாச தளத்தில் வெளியிட்டனர். அதில் நடிகையாக அறிமுகமாக போகிறார் என குறிப்பிட்டிருந்தனர்.
இந்த பதிவும் உதவலாம் :'அன்பு வாழும் கூடு’! புது வீட்டில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த மணிமேகலை!
இது எனக்கு தெரிய வந்ததும் அதிர்ச்சியடைந்தேன்.அதை பார்த்து என்னுடன் படித்தவர்கள் கேலி செய்தனர். என்னை ஒதுக்கி வைத்தனர். டெக்னாலஜி வளர்ந்து வரும் இந்த காலகட்டத்தில் மார்பிங், போலி புகைப்படங்கள் சாதாரணமாகிவிட்டன. ஆனால் இதனை சிலர் உண்மை என்று தான் நினைத்துக்கொள்கிறார்கள் என கூறியுள்ளார்..
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation