பகையாளி வீட்டிற்குப் போய் சாப்பிட்டாலும் ஒரு மிளகு சாப்பிட்டால் போதும். எத்தகைய விஷத்தன்மையையும் நொடியில் முறித்துவிடும் என்பார்கள். அதற்கேற்றால் போல் தான் சிறிய மிளகில் பல அற்புத நன்மைகள் புதைந்துள்ளது. இதோ அவை என்னென்ன என்பது குறித்து இங்கே விரிவாக அறிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.
சைவ உணவுகள் முதல் அசைவ உணவுகள் வரை அனைத்திலும் இடம் பெற்றிருக்கும் முக்கிய மசாலா வகைகளில் ஒன்றாக உள்ளது கருப்பு மிளகு. சுவைக்காக மட்டுமில்லை, கருப்பு மிளகை உணவு முறையில் சேர்த்துக் கொள்ளும் போது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும். இதோ அவற்றில் சில உங்களுக்காக.
மேலும் படிக்க: நீரிழிவு காரணமாக ஏற்படும் கடும் மலச்சிக்கல் பிரச்சனையை போக்க உதவும் நார்ச்சத்து உணவுகள்
சரியான நேரத்திற்கு சாப்பிடாதது, அளவுக்கு அதிகமாக நொறுக்குத் தீனிகள் சாப்பிடுவது போன்ற பல்வேறு காரணங்களால் நாம் சாப்பிடக்கூடிய உணவுகள் எளிதில் ஜீரணமாகாது. இது பல்வேறு உடல் நல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே எளிதில் ஜீரணமாக வேண்டும் என்றால், தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறையாவது சூடான நீரில் மிளகு கலந்து சாப்பிட வேண்டும். இதில் உள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களை மட்டும் உறிஞ்சி சாப்பிடக்கூடிய உணவுகள் எளிதில் செரிமானமாக உதவுகிறது.
மேலும் படிக்க: பெண்களே அதிகரித்த எடையை சட்டென்று குறைக்கணுமா? இதை மட்டும் குடிங்க
இதுபோன்ற பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளதால் கட்டாயம் மிளகை உணவு முறையில் சேர்த்துக் கொள்வது நல்லது.
Image credit - pexels
உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com