உலகம் முழுவதும் தமிழ் கடவுள் என்றழைக்கப்படும் முருகப்பெருமானுக்கு பக்தர்கள் ஏராளம். தமிழகத்தைப் பொறுத்தவரை முருகனுக்காகவே திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்சோலை என அறுபடை வீடுகள் உள்ளது. ஒவ்வொரு தலங்களுக்கும் சென்று வருவதை விரும்புகள் பக்தர்களுக்காகவே அரிய வாய்ப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல சுற்றுலாத் திட்டங்களை அறிவிக்கும். அந்த வரிசையில் தற்போது ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு முதியவர்களுக்காக முருகனின் அறுவடை வீடுகளுக்குச் செல்வதற்கு இலவச ஆன்மீக சுற்றுலா திட்டத்தை அறிவித்துள்ளது. இதற்கு தகுதியுடைவர்கள் யார்? எப்படியெல்லாம் விண்ணப்பிக்க வேண்டும்? என்பது குறித்த முழு விபரம் இங்கே.
விண்ணப்பம் பெறுவது எப்படி?
தமிழக அரசு அறிவித்துள்ள இலவச ஆன்மீக சுற்றுலாவிற்குப் பயணம் செய்ய வேண்டும் என்றால், முதியவர்கள் இரண்டு வழிகளில் விண்ணப்பத்தைப் பெற முடியும். முதலாவதாக இந்து சமய அறநிலையத்துறை இணையதளப் பக்கத்திலிருந்து விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அருகிலுள்ள இந்து சமய அறநிலையத்துறை மண்டல அலுவலகங்களில் நேரில் சென்ற பெற்றுக்கொள்ளலாம். இதையடுத்து இதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் சரியாக பூர்த்தி செய்துக் கொள்ளவதோடு கேட்கப்பட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும். இதுக்குறித்து பிற தகவல்களைப் பெற வேண்டும் என்றால் 1800-425-1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு சந்தேகங்களைக் கேட்டறிந்துக் கொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி:
மேற்கூறிய படி ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த பின்னதாக வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்களை சரிபார்த்த பின்னதாக தகுதியான மூத்த குடிமக்கள் முருகனிள் அறுபடை வீடுகளுக்கு தமிழக அரசின் சார்பில் அழைத்துச் செல்லப்படுவார்கள். இந்த ஆன்மீக சுற்றுலா முழுக்க முழுக்க இலவசம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால் லைக் செய்யுங்கள். மேலும் இதுபோன்ற முக்கிய தகவல்கள் மற்றும் செய்திகளைப் பெற herzindagi tamil வுன் இணைந்திருங்கள்.
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation