herzindagi
image

OG movie box office collection day 1: 'ஓஜி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் இவ்வளவா? பாக்ஸ் ஆஃபீஸில் சாதனை படைக்கும் பவன் கல்யாண்

OG movie box office collection day 1:'They Call Him OG' திரைப்படாம் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் சாதனை படைத்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான பல்வேறு திரைப்படங்களின் வசூலை இப்படம் முறியடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Editorial
Updated:- 2025-09-26, 13:05 IST

OG movie box office collection day 1: பவன் கல்யாண் நடிப்பில் உருவான ஆக்‌ஷன் த்ரில்லர் திரைப்படமான 'They Call Him OG', வெளியான முதல் நாளே உலகளவில் சுமார் ரூ. 100 கோடி வசூலித்து பாக்ஸ் ஆஃபீஸில் ஒரு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இயக்குநர் சுஜீத் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த கேங்ஸ்டர் டிராமா வகையிலான திரைப்படம், ரசிகர்களிடம் இருந்து பெருமளவு பாராட்டுகளை பெற்று வருகிறது.

மேலும் படிக்க: OG movie twitter review: பவன் கல்யாண் ரசிகர்களுக்கு விருந்து வைத்ததா 'ஓஜி' திரைப்படம்? ட்விட்டர் விமர்சனம் இதோ

 

ப்ரீமியர் காட்சிகளில் தொடங்கிய வசூல் வேட்டை:

 

'ஓஜி' திரைப்படம் உலகளவில் செப்டம்பர் 25 அன்று வெளியான நிலையில், இந்தியாவில் பல திரையரங்குகளில் செப்டம்பர் 24 ஆம் தேதி இரவே சிறப்புக் கட்டண காட்சிகளாக (Paid Premieres) திரையிடப்பட்டது. இந்தப் ப்ரீமியர் காட்சிகள் படத்திற்கு ஒரு வலுவான தொடக்கத்தை அளித்தன. குறிப்பாக, ப்ரீமியர் காட்சிகள் மூலம் மட்டுமே இப்படம் ரூ. 20.25 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.

OG movie box office collection

 

ஓஜி திரைப்படத்தின் வசூல் நிலவரம்:

 

ப்ரீமியர் காட்சிகளின் வசூல் சாதனையுடன், முதல் நாளான செப்டம்பர் 25 அன்று, 'ஓஜி' திரைப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் ரூ. 70 கோடி வசூலித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் இப்படத்தின் ஒட்டுமொத்த வசூல் ரூ. 90.25 கோடியை எட்டியுள்ளது. வெளிநாட்டு வசூலையும் சேர்த்தால், 'They Call Him OG' திரைப்படம் முதல் நாளிலேயே உலகளவில் ரூ. 100 கோடி என்ற மைல்கல்லை தாண்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க: Mirai twitter review: ஃபேண்டசி பாணியில் பார்வையாளர்களை ஈர்த்ததா மிராய் திரைப்படம்? ரசிகர்கள் ட்விட்டர் விமர்சனம்

 

பவன் கல்யாணின் தீவிர அரசியல் ஈடுபாடுகளுக்கு இடையே, இந்தப் படத்தை படக்குழுவினர் முடித்துள்ளனர். இயக்குநர் சுஜீத்தின் இயக்கத்தில் பவன் கல்யாண், மிகவும் ஸ்டைலான தோற்றத்தில் வந்துள்ளதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

They call him OG

 

டி.வி.வி. நிறுவனம் தயாரிப்பில் உருவான இந்தப் படத்தில், பவன் கல்யாண் 'ஓஜஸ் கம்பீரா' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் இணைந்து பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி, அர்ஜுன் தாஸ், பிரியங்கா மோகன், ஸ்ரியா ரெட்டி மற்றும் பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

 

இனி வரும் நாட்களிலும் 'They Call Him OG' திரைப்படத்தின் வசூல் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: Twitter

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com