Ethirneechal Aadhi Gunasekaran : யார் அடுத்த ஆதி குணசேகரன்? எதிர்பார்ப்பில் எதிர்நீச்சல் சீரியல் ரசிகர்கள்

எதிர்நீச்சல் சீரியலில் யார் அடுத்த ஆதி குணசேகரன்? என்ற கேள்வியை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். இதுக் குறித்து பிரபல நடிகர் ஒருவரிடம் பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ethirneechal serial marimuthu

சன் டிவியில் ஒளிப்பரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் ரோலில் நடித்தவர் இயக்குனர் மாரிமுத்து. கடந்த 30 ஆண்டுகளாக சினிமா துறையில் இயக்குனராக, நடிகராக, உதவி இயக்குனராக, எழுத்தாளராக வலம் வந்த மாரிமுத்துவை உலகம் முழுவதும் அறியும் முகமாக மாற்றியது எதிர் நீச்சல் சீரியல். ’இந்தாம்மா ஏய்’ என இவர் பேசிய வசனம், பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனது. இவரின் நடிப்புக்காவே தொடர்ந்து சீரியலை பார்த்து வந்த ரசிகர்கள் கோடி. அந்த சீரியலில் ஆதி குணசேகரனாகவே வாழ்ந்து காட்டியவர், புகழின் உச்சத்தில் இருக்கும் போதே ரசிகர்களை விட்டு மறைந்துவிட்டார்.

நேற்று முன் தினம் (செப் 8) மாரிமுத்து, எதிர் நீச்சல் சீரியலுக்காக டப்பிங் பேசி கொண்டிருந்த போது திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. ஏற்கெனவே இதயத்தில் பிரச்சனை இருப்பதால் டப்பிங்கை பாதியிலே நிறுத்தி விட்டு, அவசர அவசரமாக வெளியே வந்த மாரிமுத்து, தனது குடும்பத்தாரிடம் ஃபோனில் தகவலை சொல்லிவிட்டு, அவரே காரை ஓட்டிக் கொண்டு அருகிலிருக்கும் தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், மாரிமுத்துவை காப்பாற்ற முடியவில்லை. மருத்துவமனையிலே அவரின் உயிர் பிரிந்தது. பின்பு அவரின் உடல் பொதுமக்கள் மற்றும் பிரபலங்கள் பார்வைக்காக சென்னையில் இருக்கும் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டது. பின்பு, மாரிமுத்துவின் குடும்பத்தினர் அவரின் உடலை தேனிக்கு எடுத்து சென்றனர்.

யார் அடுத்த ஆதி குணசேகரன்?

நேற்றைய தினம் (செப் 9) மாரிமுத்துவின் உடல் அவரின் சொந்த கிராமத்தில் தகனம் செய்யப்பட்டது. மாரிமுத்துவின் மறைவு எதிர்நீச்சல் சீரியலுக்கு பேரிழப்பு என்பே உண்மை. சீரியலுக்கு தூண் போல் நின்றவர் தற்போது மறைந்துவிட்டார். அவரின் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்து விட்டது. இப்போது அந்த இடத்தை பூர்த்தி செய்ய யார் வருவார்? என்ற கேள்வி ரசிகர்கள் தரப்பில் எழுந்துள்ளது. இந்நிலையில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் வேல ராமமூர்த்தியிடன் பேச்சுவார்த்தை நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

vela ramamoorthy

கவிஞரும், நடிகருமான வேல ராமூர்த்தியுடன் மறைந்த மாரிமுத்துவும் சேர்ந்து நடித்துள்ளார். இவர்கள் இருவரும் அண்ணன் - தம்பிகளான சேர்ந்து படத்தில் நடித்து இருக்கிறார்களாம் இந்நிலையில் ஆதி குணசேகரன் ரோலில் நடிக்க வேல ராமூர்த்தியிடன் கேட்கப்பட்டதாம். ஆனால் அவர் தற்போது திரைப்படங்களில் பிஸியாக இருப்பதால் சீரியல் குறித்து தற்போது முடிவு எடுக்க முடியவில்லை என கூறிவிட்டாராம். இதனால் எதிர் நீச்சல் குழுவுக்கு பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாரிமுத்துவை ஈடுசெய்யும் அளவுக்கு அந்தஃ ரோலில் அடுத்து யார் நடிப்பார்? எனற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தற்போது எழுந்துள்ளது.

இதுப்போன்ற சினிமா பதிவுகளுக்குலைக் செய்யவும். ஹெர்ஷிந்தகி தமிழ் பக்கத்தில் இணைவதன் மூலமாக தொடர்ந்து பயனுள்ள பதிவை காணலாம்.

Images Credit: Google

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP