herzindagi
image

Su From So ott release: விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்று வசூல் சாதனை படைத்த கன்னட திரைப்படம்; ஓடிடியில் வெளியானதால் ரசிகர்கள் மகிழ்ச்சி

Su From So ott release: சமீபத்தில் கன்னடத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற சு ஃப்ரம் சோ (Su From So) என்ற திரைப்படம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி இருக்கிறது. இதனால், ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Editorial
Updated:- 2025-09-09, 12:08 IST

Su From So ott release: கன்னடத்தில் அண்மையில் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற சு ஃப்ரம் சோ (Su From So) திரைப்படம், இன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்க: Coolie ott release: ரஜினிகாந்த் - லோகேஷ் கூட்டணியில் வெளியான கூலி; எந்த ஓடிடியில் எப்போது பார்க்கலாம்?

 

ஆச்சரியப்படுத்தும் கன்னட திரையுலகம்:

 

தென்னிந்திய திரையுலகில் சமீப காலமாக கன்னடத்தில் வெளியாகும் திரைப்படங்கள் கவனம் ஈர்த்து வருகின்றன. இதற்கு உதாரணமாக, கே.ஜி.எஃப், காந்தாரா, 777 சார்லி உள்ளிட்ட பல படங்களை கூறலாம். குறிப்பாக, சிறிய பட்ஜெட்டில் உருவாகி இருந்தாலும் கதை மற்றும் தயாரிப்பு பணிகளின் தரம் காரணமாக இப்படங்கள் மாபெரும் வெற்றி பெறுகின்றன.

Su from so movie

 

அந்த வரிசையில் சமீபத்திய வரவாக சு ஃப்ரம் சோ (Su From So) திரைப்படம் இணைந்திருக்கிறது. கடந்த ஜூலை மாதம் 25-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது. ஏறத்தாழ ரூ. 6 கோடி பொருட்செலவில் உருவான இந்த திரைப்படம், உலக அளவில் ரூ. 125 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Madharaasi movie twitter review: ரசிகர்களை ஈர்த்ததா சிவகார்த்திகேயன் - ஏ.ஆர். முருகதாஸின் கூட்டணி? மதராஸி திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனம்

 

சு ஃப்ரம் சோ திரைப்படத்தின் கதை சுருக்கம்:

 

அசோகா என்ற இளைஞருக்குள் சுலோச்சனா என்ற ஒரு பெண்ணின் ஆவி புகுந்து விட்டதாக கூறப்படும் நிலையில், அதன் விளைவாக ஏற்படும் நிகழ்வுகளை காமெடியுடன் இப்படத்தில் கூறி இருக்கின்றனர். ஏற்கனவே, இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான போது பலரும் பாராட்டுகளை தெரிவித்தனர். இதனால், திரையரங்கில் இப்படத்தை தவற விட்டவர்கள் ஓடிடியில் காண்பதற்கு மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

Su from So OTT release

 

அதற்கு ஏற்றார் போல், இன்று (செப்டம்பர் 9) முதல் சு ஃப்ரம் சோ (Su From So) திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் காணலாம். குறிப்பாக, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் இப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது. இதனால் கன்னட ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து மொழி சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருந்தால், அதைப் பகிரவும் மேலும் இதே போன்ற பிற கட்டுரைகளைப் படிக்க Her Zindagi உடன் இணைந்திருங்கள்.

 

Image Credit: YouTube

Disclaimer

உங்களைப்போலவே, உங்கள் சருமமும், உடலும் வித்தியாசமானது. எங்களின் பதிவுகள் மூலமாகவும், சமூக ஊடக சேனல்கள் மூலமாகவும் பகிரப்படுபவை யாவும் நம்பத்தகுந்ததாகவும், நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டதாகவும் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கிறோம். இருப்பினும், எந்தவொரு வீட்டு வைத்தியம், டிப்ஸ் அல்லது ஃபிட்னஸ் டிப்ஸ் போன்றவற்றை முயல்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனை அவசியம். ஏதேனும் கருத்து தெரிவிப்பதற்கு அல்லது புகார்களுக்கு எங்களை தொடர்புக்கொள்ளவும். compliant_gro@jagrannewmedia.com