தமிழ் ஓடிடி ரிலீஸ் : டிடி நெக்ஸ்ட் லெவல், விஜய் சேதுபதியின் ஏஸ், லெவன்... இந்த வார படங்கள்

திரையரங்க வெளியீட்டுக்கு சற்றும் குறையாமல் ஓடிடி தளங்களில் புதிய படங்கள் வெளியாகின்றன. இந்த வாரம் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல், விமர்சன ரீதியாக பாராட்டை பெற்ற லெவன், விஜய் சேதுபதியின் ஏஸ் ஆகிய படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகின்றன. எந்த படம் ? எந்த ஓடிடி தளத்தில் வெளியாகிறது என்பதை தெரிந்து கொள்வோம்.
image

திரையரங்குகளில் படம் பார்க்கும் வாய்ப்பை தவறவிட்ட நபர்களுக்கு ஓடிடி தளங்கள் வரப்பிரசாதமாக அமைந்துள்ளன. தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்றால் ஆயிரங்களில் செலவாகும் என சிந்திக்கும் நபர்கள் குறைந்த செலவில் ஓடிடி தளங்களில் படங்களை கண்டுகளிக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த வாரம் தமிழில் சந்தானத்தின் டிடி நெக்ஸ்ட் லெவல், விஜய் சேதுபதியின் ஏஸ் படங்கள் வெளியாகின்றன. மலையாள சினிமா பிரியர்கள் ஆலப்புழா ஜிம்கானா காணலாம். தெலுங்கில் ராணா நாயுடு வெப் தொடர் வெளிவந்துள்ளது.

டிடி நெக்ஸ்ட் லெவல் - ஜீ 5

பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் மே 16ஆம் தேதி வெளியானது. கஸ்தூரி ஷங்கர், யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, கிங்ஸ்லி, கெளதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். முந்தைய பாகங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் டிடி நெக்ஸ்ட் லெவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. ஹாரர் காமெடி படங்களை விரும்புவோர் இப்படத்தை ஜீ 5 ஒடிடி தளத்தில் பார்க்கலாம்.

விஜய் சேதுபதியின் ஏஸ் - அமேசான் பிரைம்

ஆறுமுக குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த ஏஸ் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இந்த வாரம் ஸ்ட்ரீமிங் ஆகிறது. யோகி பாபு, பப்ளூ பிரித்விராஜ், கே.ஜி.எஃப் அவினாஷ் இப்படத்தில் நடித்துள்ளனர். வசீகரிக்கும் அழகி ருக்மணி வசந்திற்காகவும், விறுவிறுப்பான கதைக்களத்திற்காகவும் ஏஸ் படத்தை காணலாம்.

லெவன் - டென்ட்கொட்டா

லோகேஷ் அஜில்ஸ் இயக்கத்தில் நவீன் சந்திரா நடித்து வெளிவந்த இப்படம் டென்ட்கொட்டா ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் ஆகிறது. எதிர்பாராத திருப்பங்களுடன் செல்லும் க்ரைம் திரில்லர் கதை நம்மை ரசிக்க வைக்கும். இதை மினி ராட்சஷன் என்றே அழைக்கலாம்.

மேலும் படிங்கTourist Family OTT : ஓடிடியில் கதைக்க போகும் டூரிஸ்ட் ஃபேமிலி படம்; எப்போ தெரியுமா ?

ஆலப்புழா ஜிம்கானா - சோனி லைவ்

பிரேமுலு ஹீரோ நஸ்லான் நடித்த ஆலப்புழா ஜிம்கானா திரைப்படம் சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இது பள்ளி, கல்லூரி மாணவர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்ட படம். வார முறையில் ஜாலியாக ஒரு படம் பார்க்க விரும்பினால் ஆலப்புழா ஜிம்கானா சரியான தேர்வாக இருக்கும்.

2023ல் வெளிவந்து சர்ச்சையை கிளப்பிய ராணா நாயுடு வெப் தொடரின் இரண்டாவது சீசன் தற்போது நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. பாகுபலி ராணா டகுபதி ரசிகர்கள் இந்த வெப் தொடரை தனியாக பார்க்கவும்.

HzLogo

Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!

GET APP