அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் மே 1ஆம் தேதி வெளிவந்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சிம்ரன், ஆவேஷம் மிதுன் ஜெய் ஷங்கர், நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பக்ஸ், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், யோகலட்சுமி, யோகி பாபு, இளங்கோ குமரவேல் உள்ளிட்டோர் நடித்திருந்த படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சீன் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக மாறிய டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் 25 நாட்களை கடந்து திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி ஓடிடி - ஜியோ ஹாட்ஸ்டார்
டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஓடிடி உரிமையை ஜியோ ஹாட்ஸ்டார் நிறுவனம் பெற்றுள்ளது. ஜூன் 2ஆம் தேதி அன்று ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது. முதற்கட்டமாக தமிழில் மட்டுமே ரிலீசாகிறது. டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படத்தை திரையரங்குகளில் தவறவிட்டவர்கள் ஜியோ ஹாட்ஸ்டாரில் காணலாம். எனினும் படத்தில் வரும் சிறுவனின் மம்பட்டியான் பாடல் நடனத்திற்காகவே திரையரங்குகளில் கட்டாயம் பார்க்க தவறாதீர்கள்.
டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு பாராட்டு
டூரிஸ்ட் ஃபேமில் வெளியான நாள் முதல் பலரும் படத்தை அனைத்து தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ராதா மோகனின் மொழி படத்திற்கு பிறகு யதார்த்தமான கதைக்களத்துடன் கலகலப்பான உணர்வுப்பூர்வமான படம் வெளியாகி இருப்பதாக விமர்சகர்களும் தெரிவித்திருந்தனர். தெலுங்கில் மிகப்பெரிய இயக்குநரான ராஜமெளலி டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பாராட்டியதை தொடர்ந்து தெலுங்கு மொழியில் எப்போது டப் செய்து வெளியிடப்படும் என அம்மக்களும் கேட்டு இருந்தனர். இந்த நிலையில் நடிகர் நானியும் டூரிஸ்ட் ஃபேமிலி படக்குழுவை பாராட்டியுள்ளார்.
டூரிஸ்ட் ஃபேமிலி வசூல்
டூரிஸ்ட் ஃபேமிலி மே 1ஆம் தேதி ரிலீசாகி இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டி இருக்கிறது. மே 23ஆம் தேதி அப்படம் உலகளவில் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இன்னும் சில வாரங்கள் திரையரங்குகளில் தொடரும் நிலையில் ஓடிடி விற்பனை உரிமத்தை சேர்த்து 100 கோடி ரூபாய்க்கு டூரிஸ்ட் ஃபேமிலி படம் ஈட்டி இருக்கும்.
படத்தின் இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் அடுத்ததாக தனுஷிடம் கதை சொல்லி இருப்பதாகவும் கதை விரிவாக்கம் செய்ய அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிங்ககுக் வித் கோமாளியில் முதல் எலிமினேஷன் : சோகத்துடன் வெளியேறிய போட்டியாளர், தப்பிய கஞ்சா கருப்பு
Mark your date to welcome the most loved family on June 2nd ❤️ #TouristFamily streaming from June 2 on #JioHotstar @abishanjeevinth @RSeanRoldanmusical @sasikumardir @SimranbaggaOffc @Foxy_here03 @barathvikraman @Yuvrajganesan @mageshraj @MithunJS5 @iYogiBabu @dirbucks… pic.twitter.com/Yy3EvS5NJZ
— JioHotstar Tamil (@JioHotstartam) May 27, 2025
Take charge of your wellness journey—download the HerZindagi app for daily updates on fitness, beauty, and a healthy lifestyle!
Comments
எல்லா கருத்துகளும் (0)
Join the conversation